வியாழன், ஜூன் 05, 2014

பொண்ணு பாக்க போகையிலே !


“பொண்ணு பாக்கப்போன இடத்துல இப்படி நடக்கும்னு  நாங்க கொஞ்சம்கூட எதிர்ப்பாக்கல “


“என்ன ஆச்சு? ““பொண்ணு புடிச்சி இருக்கா இல்லையானு நாங்க வீட்டுக்குப்போயி லெட்டர் போடுகிறோம் அப்படினு சொன்னோம் அதுக்கு அவங்களும் சரிங்க நாங்க பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் உங்க லெட்டர பார்த்துட்டு அப்புறமே பார்சல்ல அனுப்புறோம் அப்படினு சொல்லிட்டு ஒருவாய் பச்ச தண்ணிகூட குடுக்கல...!!! “


 .......................................................................................................................

“ பொண்ணுக்கு ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா னு கேட்டது ரொம்ப தப்பாப்போச்சு “


“ஏன்?


 “ நீங்க என்ன  கரகாட்ட கோஷ்டியா? அப்படினு வெடுக்குனு பொண்ணு கேட்டுபுட்டா “
 

 .......................................................................................................................

“பொண்ணு என்ன  மாப்பிள்ளையிடம் ஏதோ சீட்டு கொடுத்துட்டுப்போறா....புடிச்சிருக்குனு எழுதி கொடுத்தாளா? “ மண்ணாங்கட்டி ...டீ பிஸ்கட்ஸ் பஜ்ஜி எல்லாத்துக்கும் ஒரு கணக்குப்போட்டு பில் செட்டில் பண்ணிவிட்டுப்போகவும் அப்படினு எழுதியிருக்கா “
  
.............................................................................................................................


“ இண்டர்நெட் மூலயமா பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணது தப்பாப்போச்சு “


“ ஏன் என்ன ஆச்சு ? “
 

“சாப்பாடு கேட்டா நான் ஆபிஸ் ல இருந்து வர லேட் ஆகும் செய்முறை பக்கத்துக்கு லிங்க் கொடுத்து படிச்சுப்பாத்து செஞ்சு சாப்பிடுங்கனு சொல்லிடறா

 
....................................................................................................................................

8 கருத்துகள்:

 1. இப்படித்தான் பொண்ணுங்க வெவரமா இருக்கோணும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாரும் வெவெரமா ஆயிட்டா நமக்கெல்லாம் எப்படிங்க பொண்ணு கிடைக்கும்?

   நீக்கு
 2. மிகவும் ரசித்தேன்
  குறிப்பாக பார்சல்....
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அட எல்லாமே சூப்பர்.
  இப்பவெல்லாம் பொண்ணுங்க ரொம்ப உஷாரா இருக்காங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாரும் உஷா ரா ஆயிட்டா நமக்கெல்லாம் எப்படிங்க பொண்ணு கிடைக்கும்?

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!