செவ்வாய், ஜூன் 24, 2014

மாமா...மாப்ளே...
“டே மாப்பிள்ளை காலையில இருந்து எங்கடா போயி இருந்த?”
“சைட் ட பாக்கத்தான்”

“உனக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சேடா அப்புறம் ஏன்டா சைட் அடிக்கிற”


 

“அட லூசு... நான் பில்டிங் கட்டிட்டு இருக்கேனே அந்த சைட்ட சொன்னேன்”

“ஆமா இப்படி எல்லாத்துக்கும் ஒரே மாதிரி சொன்னா எங்களுக்கு எப்புடி புரியும், எங்களுக்குத்தெரிஞ்சதெல்லாம் 'அந்த' ஒரே சைட் தான்”
............................................................................................................................................................

“வாட் டு யு மீன்?”

“எல்லாம் புது கெண்டை மீன் தான் மாமு”

...................................................................................................................................................................

“அமெரிக்காவுல சம்பளமெல்லாம் டாலரா தான் கொடுப்பாங்க”

“என்ன டாலர் மாப்ள, ஐயப்பன் டாலரா? இல்ல வேற ஏதாவதா?”
...............................................................................................................................................................

“பிளாக்குல எழுதரேன் பிளாக்குல எழுதரேனு சொல்றியே ஏன் உன்னால நேர்மையா வெளிப்படையா எழுத முடியாதா?”

“அய்யோ.... அந்த பிளாக் வேற இந்த பிளாக் வேறடா”

“நான் கூட பிளாக்மணி பிளாக்டிக்கட் அப்படினு சொல்றாங்களே அந்த மாதிரி இதுவும் ஒன்னுணு நினைச்சிட்டேன்டா மாப்ள”

...............................................................................................................................................................

‘வாலி’ball இருக்கும்போது, ஏன் கண்ணதாசன்ball  வைரமுத்துball  பா.விஜய்ball  எல்லாம் இருக்கக்கூடாது? இதக்கேட்டா அடிக்க வாராங்க மாப்ள.
.........................................................................................................................

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முத்தாய்பாய் முதல் கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. வணக்கம்
  சிந்திக்க சிரிக்க அருமையான உரையாடல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாம் கருத்திட்ட இனிய சகோதரர்க்கு மிக்க நன்றிகள் பல.

   நீக்கு
 3. #கண்ணதாசன்ball வைரமுத்துball பா.விஜய்ball எல்லாம் இருக்கக்கூடாது? #
  எதுக்கும் அமலா ball கிட்டே கேட்டுப் பாருங்க ,அவரோட இளம்புருசன் கொடுக்கிறதையும் வாங்கிக்குங்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான்ஜீ கருத்துரை சொல்ல வந்தேளா ? இல்லை இப்படி கோல்மூட்ட வந்தேளா ? புதுபுருசன் சரி அதென்னெ ? இளம்புருசன் உங்களுக்கு குசும்புதான்...

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. ரெண்டு ஜி க்களும் சேர்ந்து இப்படி கும்மியடிக்கிறீர்களே !

   நீக்கு
  4. மெய்யாலுமே ரெண்டு ஜி க்களும் சேர்ந்து கும்மிதான்.....ரசித்தோம்!

   நீக்கு
 4. வார்த்தை விளையாட்டில் விளைந்த
  நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் அருமை
  தொடர நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிங்க ஐயா. தங்களின் தொடர்ந்த ஊக்கப்படுத்துதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வாக்கு இல்லாமலா ஜெயிக்க முடியும்? மிக்க நன்றிகள் பல.

   நீக்கு
 6. அருமையான சுவையாக இருந்தது நண்பரே.....

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான நகைச்சுவை பதிவு...ப்ளாக்கையே நகைசுவைக்குள்ள கொண்டு வந்து சிறப்பு செய்துட்டீங்க..

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 9. ஹாஹாஹா அனைத்தும் அருமையான நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்கள்!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!