அடக்கொடுமையே! மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறதுனா இது தானா?
“நான் எத்தனைமுறை ஃபோன் பண்ணியும்
அவர் நேற்று சாயந்திரத்திலிருந்து ஃபோனை
எடுக்கவே இல்ல “
“அட பாவம்பா, அவர்தான் நேத்து காலையிலயே
இறந்துட்டாரே “
“அட! தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்
அப்படினு ஃபோன்ல ஒரு அம்மா சொல்லும்போதே எனக்கு சந்தேகம் வந்துச்சி. அப்படி தொடர்பு
கொள்ள முடியாத இடம் எதுனு இப்ப தான் புரியுது.
...................................................................................................................
கீர அர்த்தம் என்ன?
“எப்படி கீர?”
“ஆங் நல்லாகீறேன்”
“அய்ய உன்ன யாரு கேட்டது...இந்த கீர கட்டை கேட்டேன்.
ஓ!...அப்டியா?....
பிரிதொரு சமயம்..அவர்கள் இருவரும்......
“ஏம்மா எப்படிம்மா கீர ?”
“கட்டு பத்து ரூவா”
“அய்ய...நாங் கீரைய கேக்கல உன்னதாங் கேட்டேன் “
“ஓ நல்லா கீரேன்”
பக்கத்துல யாரோ.... தோடா!
.......................................................................................................................................................
யாராவது உண்மையிலே விளக்கம் சொல்லுங்கப்பா.
மடையன் ஓகே.
அது என்ன வாத்துமடையன்?
வாத்துக்கும் மடத்தனத்துக்கும் என்ன சம்பந்தம்? கதைஏதாவது இருந்தால் சொல்லுங்கள் கேட்போம்.
அருமை நண்பரே அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குநல்லா கீது...!
பதிலளிநீக்குரொம்ப தேங்ஸ்ங்க.
நீக்குவாத்துக் கூட்டத்தில் ஒன்றை சுட்டாலும் மற்றவை எல்லாமே தன் மீது தான் குண்டு பட்டிருக்கிறது என்று நினைத்து எல்லா வாத்துக்களுமே கீழே விழுந்து விடுமாம். அதனால் தான் வாத்து மடையன் என்ற சொல் வழக்கம் வந்திருக்க வேண்டும்!
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க. அறிந்துக்கொண்டேன்.
நீக்குதமிழர்களுக்குப் பழக்கமில்லாத தரமான நகைச்சுவைப் பதிவு வெளியிட்டு அசத்தரீங்க. தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்..
பதிலளிநீக்குகோபாலன்
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.
நீக்குஅனைத்தும் அருமை. வாத்து மடையன் கதையை நானும் தெரிந்து கொண்டேன்
பதிலளிநீக்கு