சனி, ஜூன் 14, 2014

உலகக்கோப்பை கால்பந்து வடிவேலு டீம்....

வடிவேலு:-   "கால்பந்து எங்கடா?"
 


"அண்ணே பெட்டிகடையில கேட்டோம்....ஸ்போர்ட்ஸ் கடையில கேட்டோம்.....ஏன் சூப்பர்மார்கட்ல கூட கேட்டோம்ணே எல்லா கடையிலும் தேடி பாத்துட்டோம்னே...எல்லா இடத்துலயேயும்   'முழு' பந்து தாண்ணே இருக்கு நீங்க கேட்ட 'கால்' பந்து இல்லவே இல்லண்ணே" 

"ரெஃப்ரிஅண்ணே!  கால்பந்துனா காலால தானே உதைச்சி கோல்போடனும், அவன் என்னடானா தலையால முட்டி கோல் போடாறாண்ணே,  இது ஆட்டத்துல சேப்பில்லேனு சொல்லுங்கண்ணே"

 "என்ன வேணும் "


"பந்துவேணும்"


"என்னபந்து"


"கால் பந்து"


"வலது காலா?  இடதுகாலா?"(மனதிற்குள் வடிவேலு  நீ என்னையே கலாய்கிறியா... இருடி)


"ஆமா இது கால் பந்து தானே"


 "ஆமா"


"அப்புறம் கையால எடுத்து தரே"


"கையால தான் மேல இருந்து எடுத்துத்தர முடியும் வேற எப்படி எடுக்கிறது"


"சரிசரி இது கால் பந்து தானே"


"ஆமாய்யா"


"முழுசா இருக்கு"


 "அய்யோ வந்தவுடனே ஏதோ எடக்கு முடக்கா பேசிட்டேன் அதுக்குனு இப்படியா உனக்கு கால்பந்துதானே வேணும் இந்தா"


"சரி இது கால் பந்துனா யாராவது முழு பந்து கேட்டா எத கொடுப்ப?"


"அய்யோ அய்யோ........"
 "நல்ல காலம் நாம கடையில வாங்கும்போது யாரும் பாக்கல.....

வெளிநாட்டுல வச்சதால வரவழியிலேயே வசதியாப்போச்சு......"

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!