வியாழன், ஜூன் 12, 2014

எல்கேஜி டெர்ரர்ஸ்.



1:- “ஏன்டா உங்க பள்ளிக்கூடம் எல்லாம் எப்படி இருக்கு?


2:- “ பள்ளிக்கூடம் திறந்து இத்தனை நாள் ஆச்சு எல்லா புக்கும் குடுத்துட்டாங்க....இன்னும் ‘ஃபேஸ்புக்க மட்டும் குடுக்கவே இல்லடா எப்ப தருவாங்கனு தெரியல...


1:- ???.....

................................................................................................................

“மாப்ள இன்னும் நம்மள சின்னப்புள்ளயாவே டிரீட் பண்ணாங்கடா உங்க அம்மா........ கொஞ்சம் சொல்லிவைடா


“என்னடா ஆச்சு?


“ லன்ஞ்ச் பிரேக்ல என்னை பார்த்துட்டு என்னாசெல்லம் அம்மா சாப்பாடு ஊட்டிவிட்டாங்களா? அப்படினு கேக்கறாங்க...பிகர் எல்லாம் என்னை ஒருமாதிரி பாக்குமோனு ஃபீலிங்கா இருக்குடா அதான்...
.........................................................................................................................

 


“இன்னா மச்சான் இப்படி ஏமாத்திட்ட?


“என்னடா புரியறமாதிரி சொல்லு


“எல்கேஜி பாஸ் பண்ணா டிரீட் வக்கிறேன்னு சொன்ன யுகேஜி ஆரம்பிச்சு ஒருவாரம் ஓடிப்போச்சு இன்னும் ஒன்னுமே சொல்லல...?

..............................................................................................................................


“ஸ்கூல் எப்படிடா இருக்கு?


“போ மச்சான், எங்க செக்க்ஷன்ல எல்லாம் வெறும் பையன்க தான் கோஎஜுகேஷனா இருக்கும்னு எதிர்ப்பார்த்தேன் இல்ல சுத்த போர் அடிக்குது, அட்லீஸ்ட் மிஸ்ஸுங்க கூட இல்லடா..... சார்ங்க தான்...எப்படி காலத்த ஓட்டப்போறேனு தெரியல.ஒரே பீலிங்கா இருக்குடா... உனக்கு எப்படி?“

.......................................................................................................................................

“மாப்ள 'வாட்ஸ்அப்' ப உடனே பிளாக் பண்ணனும்டா

“ஏன்டா?

“ கிளாஸ் ல நாம பண்ற குறும்பை எல்லாம் மிஸ்  எங்க அம்மாவுக்கு வீடியோவா உடனுக்குடனே அனுப்பிடறாங்க. வீட்ல ஒரே டார்ச்சர்டா இவங்க தொல்லை தாங்க முடியல...“
....................................................................................................................................


"பி பார் 'பீர்'னு சொன்னேண்டா அதுக்குப்போயி பிரின்ஸ்பாலை பார்னு

அனுப்பிட்டாங்க "



"ஆமா  நீ எதுக்கு பிரின்ஸ்பால் ரூம் முன்னாடி நின்ன ?"



நேத்து ஃபேஸ்புக்குல யாருனு சரியா கவனிக்காம நம்ம மிஸ்ஸுக்கு ஐ லவ் 

யு சொல்லிட்டேன் அதான் " 


..............................................................................................................................................

"ஏன்டா மாப்ள அந்த மிஸ் உன்னைப்போட்டு இந்த அடி அடிக்குது "


"அதுவா அவங்க ஃபேஸ்புக்ல நேத்துப்போட்ட ஸ்டேடஸ்க்கு லைக் போடல

 அவங்க பிளாக்ல மொக்கை பதிவுக்கு கமெண்ட் போடலடா அந்த கோபம்

 தான்" 

............................................................................................................................................





'சேவ் வாட்டர்'னு போட்டு இருந்துச்சுடா அதனால தண்ணியை ஏன் 

வீணாக்கனுமேனு கொஞ்சம் ராவா அடிச்சுட்டேன்......

டேய் மாப்ள நான் குடிச்சிட்டு பேசரேன்னு தப்பா நினைக்காத என் இத்தனை

 வருஷ அனுபவத்துல சொல்றேன்  ' பிளாக்' ல எழுதறது எல்லாம்

வேஸ்ட்...         ஃபேஸ்புக்குக்கு வாடா அங்க தான் ஜாலியா இருக்கும்.
.....................................................................................................................................................


இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்  

ஃபேஸ்புக்கை குழந்தைகளும் பயன்படுத்தலாம் செய்தி.


நம்ம எல்கேஜி டெர்ரர்ஸ்



சாட்ல இப்படியும் பேசுவாங்களோ..?.. 



வாழ்க வளமுடன்

யாவரும்???

5 கருத்துகள்:

  1. கற்பனை அற்புதம்
    மிகவும் ரசித்தேன்
    இறுதியாகச் சொன்னதும்
    சரியெனத்தான் படுகிறது
    ஃபேஸ்புக்கில் ட்விட்டரில் இருக்கும் கிக்
    பதிவில் கொஞ்சம் கம்மிதான்
    ஆனால் பதிவில் ஓட்ட கொஞ்சமாவது
    சரக்கு இருக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

      நீக்கு
  2. சொன்னவைகள் இன்றைக்கு வருத்தப்பட வேண்டிய உண்மைகள் தான்...

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!