சிரிப்பிற்கு...
சின்ன தவறு பெரிய பாடம்." அட! 'ஒன்னு 'போட மறந்ததுக்கா உன்னை சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்க ?"
"ஆமாம்பா அடுத்த பிரான்ஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணவேண்டிய
'செக்'ல ஒருலட்சத்துக்கு ஒன்னுபோட மறந்துட்டேன்"
( "பின்ன வெறும் முட்டையா போட்டா கோபம் வருமா வராதா?" )
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிந்தனைக்கு...
படிக்காத மேதை (யார்முட்டாள்?)
வாக்குச்சாவடியில்
அநேகம் பேர்
வரிசையில் நிற்பதால்
அவசர அவசரமாக
ஓட்டுப்போட
டாக்டர் பட்டம் வாங்கிய
நடப்பு எம் எல் ஏ
தேர்தல் அதிகாரியிடம்
கைநாட்டு வைத்துவிட்டுப்போனார் .
வழக்கம்போல.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அம்மா
மகனோ மகளோ
ஓட்டப்பந்தயத்திற்கு
செல்லும்போதுக்கூட
பார்த்து மெதுவா ஓடுடா
என்பாள் தாய்.
அவளுக்கு
விருதுகள் முக்கியம் அல்ல.
பிள்ளை
விழுந்துவிடக்கூடாதே
என்பது தான்
முக்கியம்.
................................
அடிவாங்கியப்பிள்ளை
சிரித்துக்கொண்டிருக்க
ஏனோ
அடித்த அம்மா
அழுதுகொண்டிருப்பாள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பணம்
பணம் புத்திசாலிகளுக்கு அடிமை
முட்டாள்களுக்கு எஜமானன்.
..............................................................................
பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது
பணம் இல்லையென்றால் உன்னை யாருக்குமே தெரியாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
/// அடித்த அம்மா அழுதுகொண்டிருப்பாள்... ///
பதிலளிநீக்குஅருமை,,,
''பணம்'' அருமை நண்பரே.....
பதிலளிநீக்குwww.killergee.blogspot.com
மிக்க நன்றிங்க ஜி !
நீக்குமிக மிக நன்றிங்க.
பதிலளிநீக்குகதம்பம் அருமை !
பதிலளிநீக்குஅதிலும் தாய் கவிதை அழகு!
மிக்க நன்றிங்க !
நீக்குகவிதைகக்ல் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குசூப்பர் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா.!
நீக்கு