திங்கள், ஜூன் 09, 2014

சின்ன சின்ன...ஐந்தறிவு ஜீவிகளுக்கு
ஆறாம் அறிவு வந்தால்
நம்மை பலியிடுமோ?-
கடவுள்களுக்கு.

......................................

எல்லாம் தெரிந்த கணினிக்கு 

ஏனோ தெரியவில்லை-

என் காதல்.
.................................................

பெயரை பரித்து மாற்றுப்பெயர்

இடும் உரிமம் ஏனோ நீ பெற்றாய்-

மரணம்.
.............................................................
தனியார் உரிமத்தை
பொது உடமையாக்கி
அனைவருக்கும் பிணம்
என்று பெயர் தரும்
மரணமே !
நீ ஒரு பொது உடைமைவாதி.
....................................................................


வேதனையும் வலியும்
வந்தபிறகு தான் தெரிகிறது-
காதலும் சாதலும்
பேச்சும் மௌனமும்
தனிமையும் நட்பும்
பாசமும் பிரிவும் எல்லாம்
எவ்வளவு கொடுமை என்று.
.............................................................................4 கருத்துகள்:

  1. அருமையான கேள்விக்கணைகள் வாழ்த்துக்கள் நண்பா...
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. சின்ன சின்ன கேள்விகள். ஆனால் பதில்களின் அர்த்தமோ பெரியது

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!