ஞாயிறு, ஜூன் 01, 2014

எப்படி திருடுவது?சர்தார்ஜி1:- “எல்லாம் எடுத்து வச்சிட்டியா?

சர்தார்ஜி2:- “ஓகே. பூட்டை உடைக்க சுத்தி, ஆளை அடிக்க தடி எல்லாம் ரெடி....மிரட்ட கத்தியும் எடுத்துக்கிட்டேன்

சர்தார்ஜி1:- “முகத்தை மறைக்க கருப்புத்துணி?

சர்தார்ஜி2:- “ஓகே அதுவும் எடுத்துட்டேன்

சர்தார்ஜி1:- “ராத்திரி சரியா 12 மணிக்கு திருட கிளம்பிடுவோம் புரிஞ்சுதா?

சர்தார்ஜி2- “ஓகே பாஸ்.புரிஞ்சுது

ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பங்களா வீட்டின் பின்புறம் இருவரும் சென்றார்கள்.....

“பாஸ் வீட்டை பூட்டல கதவு லேசா திறந்துதான் இருக்கு

 
“ இன்னும் நல்லா பாரு

 “அட! வீட்ல யாருமே இல்லை வெளியூர் போயி இருப்பாங்களோ? இல்ல எல்லாரும் நல்லா தூங்கறாங்களோஅப்படினு  நினைக்கிறேன் பாஸ் “

“அட என்னடா இது எல்லாமே வீணாப்போச்சு.... பூட்டு பூட்டி இருந்தாதானே சுத்தியால உடைச்சிட்டு உள்ள போக முடியும் ......ஆள் இருந்தாதானே முகத்தை கருப்புதுணியால மூடிகிட்டு கத்தியை காட்டி மிரட்ட முடியும்.... இப்ப என்ன பண்றது?

“ஆமாம் பாஸ் அவங்க நாளைக்கு வீட்டைப் பூட்டிட்டு படுக்கட்டும் அப்புறம் திருடலாம்

“சரி வா வீட்டுக்குப்போகலாம்

“ச்சே நாம போர இடமெல்லாம் இப்படித்தான் நடக்குது பாஸ்..வீடு பூட்டி இருந்தா ஆள் இருக்க மாட்றாங்க...ஆள் இருந்தா பூட்ட மாட்றாங்க....நாம எப்படித்தான் திருடுறது?

6 கருத்துகள்:

 1. பூட்டுற வரைக்கும் காத்திருந்து திருடி இருக்கலாம் ,நல்ல சான்ஸ் மிஸ் பண்ணி விட்டார்களே !
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அதானே அதுக்குத்தான் அப்புறம் வரலாம் அப்படினு முடிவு பண்ணிட்டாங்களோ?

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!