வெள்ளி, மே 09, 2014

பயனுள்ள வீட்டு குறிப்புகள்


சில பொருட்கள் தேவை இல்லாதபோது கண்ணில் அடிக்கடிப்பட்டு தூக்கித்தூக்கி எங்காவது போடுவோம் அதேப்பொருள் தேவையானபொழுது சத்தியமாக கண்ணில் படவே படாது... அன்றைக்கு இங்கதான் பார்த்தேன் என்று சல்லடைப்போட்டு தேடினாலும் நிச்சயமாக கிடைக்காது.இப்படி சிறியபொருட்களை அடிக்கடி தொலைத்துவிட்டு திண்டாடிக்கொண்டிருப்போம்.
                          அதனை தேடி எடுப்பதற்குள் செம டெங்ஷன் ஆகிவிடுவோம். எடுத்தப்பொருட்களை எடுத்த இடத்தில் வைக்க மாட்டீர்களா? வீட்டில் உள்ள அனைவரையும் கடித்து குதறிவிடுவோம்.

உதாரணமாக ஊசிகள்..பிளேடுகள்...குண்டூசிகள்.... டேகு நூல்கள்..சிறிய கட்டர்கள்...சிறிய கத்தரிக்கோல்..ஸ்டாப்ளர்கள்.ஸ்டாப்ளர்பின் டப்பாக்கள்..நகம் வெட்டிகள்..... பணம் கட்டும் ரப்பர் பேண்டுகள் இப்படி.....


எளியவழிகள்


1.சிறிய இரும்புப்பொருட்கள்:- ஜன்னல் கம்பிகளில் ஒரு காந்தத்தை ஒட்டிவிடுங்கள்.  உங்கள் டெங்ஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்கள் எனலாம். சிறிய ஊசிகள்... டேகுகள்... பிளேடுகள்..கட்டர்கள்... இவ்வாறான சிறியபொருட்களை அந்த காந்தத்தில் ஒட்டிவிடுங்கள். நீங்கள் தேடும்பொழுதுஎல்லாம் இப்ப கண்டிப்பா அந்தப்பொருள் கிடைக்கும் பாருங்க.


2.பணம் கட்டுப்போடும் இரப்பர் பேண்டுகள்:- இவற்றை வாங்கி அப்படியே அந்த சின்ன கவரில் வைத்துவிடுவோம் நாளடைவில் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு தேவையானபொழுது அவசரத்திற்கு உதவாது...
 ஒரு சிறிய டப்பாவில் முகப்பவுடர் கொஞ்சம் கொட்டி அவற்றில் இந்த இரப்பர் பேண்டுகளை கொட்டி  நன்றாக குளுக்கி வைத்துவிடுங்கள்..தேவையானபொழுது எடுத்துப்பாருங்கள் இப்பொழுது அழகாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வந்துக்கொண்டே இருக்கும்.


3.செரிமானம் ஆகாமல் சில நேரம் நாம் அவதிப்படுவது உண்டு...அவ்வாறான நேரங்களில் எளிய வைத்தியம் இஞ்சித்துண்டு. ஆம் ஒருசிறிய இஞ்சித்துண்டை எடுத்து தோல் நீக்கி அப்படியே கடித்து சாப்பிடலாம்.. என்ன கொஞ்சம் காரமாக இருக்கும், தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். இப்படி இஞ்சித்துண்டு சாப்பிட்டுப்பாருங்கள்... வயிற்றுப்பிரச்சனை சில நிமிடங்களில் போயேபோய்விடும்.

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் கண்ணோட்டத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  3. காந்தத்தை பீரோ சைடிலும் ஒட்டி வைத்துக் கொள்ளலாமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. காந்தம் எங்கெல்லாம் ஒட்டுகிறதோ உங்கள் வசதிக்கு ஏற்ப அங்கெல்லாம் ஒட்டிக்கொள்ளுங்கள் நன்றி ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!