சனி, மே 24, 2014

தனபால் பீர்பால் ஆன கதை.“கால்ல இவ்ளோ பெரிய முள்ளு குத்தி இருக்கே. நீங்க எதுக்கு தனியா ராத்திரியில காட்டுக்குப்போனீங்க?
“டாக்டர் தான் சொன்னார்..... சளி அதிகமா இருக்கு எதுக்கும் ‘ஆவி பிடிச்சுப்பாருங்கனு...அதுக்குத்தான்

         (பின்ன டாக்டர் சொன்னா செய்யனுமா இல்லையா?)


         00000000000000000000000000000000000000000


“அந்த பத்திரிக்கைஆசிரியர் சரியான ‘ரம்மு பிரியர் போல இருக்கு “
“எப்படி சொல்றீங்க?
“ சென்ற வா ரம்...இந்த வா..ரம்....அடுத்த வா..ரம் அப்படினுதான் பேசறார் “


(மத்த சரக்குகள்ள ஆல்கஹால் கம்மினு ரொம்ப பீல் பண்ணி இருப்பாரோ?)

                      0000000000000000000000000000000000000000000000000000000000


“இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க?
“எல்லா இடத்திலயும் முன்னாடி பக்கம் தான் சார் வேலைப்பார்த்தேன் “


              (அப்ப கண்டிப்பா உனக்குத்தான் வேலை)


        000000000000000000000000000000000000000000000


“அவர் தனபால் அப்படிங்கற தன்பேரை பீர்பால் அப்படினு மாத்தி வச்சிக்கிட்டாரா?...பீர்பால் மந்திரி மேல அவ்வளவு பிரியமோ?
“அட அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. அவர் நிறைய பீர் சாப்பிடுவார் அதனால மக்களே தனபால்னு கூப்பிடறதுக்கு பதிலா பீர்பால்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.... “


 
(அட வெயிலுக்கு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா இப்படியா பண்றது மக்கள். ரொம்ப மோசம்.... )

                                                                   


4 கருத்துகள்:

 1. வணக்கம்
  சரியான நகைச்சுவை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. வெயிலுக்கு மோர்தான் குடிப்பார்கள் ...அவரை மோர் பால் என்று அழைப்பார்களா ?

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!