வெள்ளி, மே 23, 2014

சிலையாய் நிற்கிறேன்.!!!.
பார்த்தது
படித்தது
கேட்டது
எல்லாம்
என்னில் இருந்து
ஃபார்மேட் செய்யப்பட்ட
ஃபோல்டர்ஸ் போல
அழிந்துப்போகிறது
உனைப்பார்த்த நாழிகையில்.

நீ
மட்டுமே
என்
நினைவுகளோடும்
நெஞ்சோடும்
உறவாடுகிறாய் !


மூளைச்செல்கள்
அத்தனையையும்
முடமாக்கி
உன்னகத்தே
எனை
கைப்பாவையாக்குகிறாய்!.


தாக்கம்
ஏற்படுத்தி
தூக்கம் பறித்தவளே !
என் தூரப்பார்வை
கிட்டப்பார்வை
எல்லாப்
பார்வைகளிலும்
பாவை நீயே !


உன்னைப்பற்றிய
நினைவுகளினை
மினிமைஸ் செய்தால்
மேக்ஸிமைஸ்
ஆகிறாய்...
என்ன
கூத்தடி இது!.


வைரஸ் ஆல்
முடங்கிப்போன
விண்டோஸ் போல
உன்னால்
நான்
செய்வதறியாது
செயலற்றுப்போய்
சிலையாய் நிற்கிறேன்.!!!.

6 கருத்துகள்:

 1. அட, அட அருமை. அருமை. ரசித்தேன்.
  பார்த்து, அப்புறம் சிஸ்டம் பூட் ஆகாம போய்விடப்போகுது!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூட் ஆகலைனா கீழ்ப்பாக்கம் போக வேண்டியதுதான்.வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 2. சிலையாய் நின்றால் .எவனாவது mouse யாய் வந்து கிளிக்கிகிட்டு பொய் விடுவான் ஜாக்கிரதை !

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!