வெள்ளி, மே 16, 2014

நோட்டா...படுதோல்வி !.“தலைவரை உலகம் தெரியாதவர் னு எப்படிச்சொல்றீங்க?


“உலக உருண்டையைக்காட்டி என்னன்னு கேட்டதற்கு கலர் பேஸ்கட்பால் அப்படினு சொல்றாறே

…………………………………………

‘இன்னைக்குத்தான் எனக்கு ரிசல்ட் ரொம்ப டெங்க்ஷனா இருக்கு “


“ தேர்தல்ல நின்னீங்களா சொல்லவே இல்ல “


“ அட நேத்து ஸ்கேன் பண்ணேன் அதனோட ரிசல்ட் இன்னைக்குத்தறாங்கனு சொன்னாங்க அதை சொன்னேன் “

..........................................................................................................

தலைவர்: “கடவுளே ரிசல்ட்ல எனக்கு நல்ல மார்க் வரணும் “


தொண்டர் – “என்ன தலைவரே இப்படி வேண்டிக்கிறீங்க..நிறைய ஓட்டுத்தானே கிடைக்கனும் னு வேண்டிக்கனும் “


தலைவர் :- “அட இப்பதான்பா நான் பத்தாவது பரிட்சை எழுதினேன்...அதுல பாஸ் ஆக வேண்டிக்கிறேன் “
..................................................................................................................

“ஜெயிச்சா 108 கிடா வெட்டறேன்னு வேண்டிக்கிட்டது தப்பாப்போச்சு “


"ஏன்?"


“ரெட்கிராஸ் புளுகிராஸ் மெம்பர்ஸ் எல்லாரும் சேர்ந்து தலைவருக்கு எதிரா ஓட்டுப்போட்டுட்டாங்க.... அதான் தோத்துட்டார் “
...............................................................................................................

“ காங்கிரஸ் படுதோல்வி “


“ அய்யய்யோ அப்ப இந்திராகாந்தி பிரதமர் ஆக மாட்டாங்களா? “


“அடப்பாவி நீ இன்னும் அந்த காலத்துலயே தான் இருக்கியா?
................................................................................................................

தலைவர் :- "இதனால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் இந்தியாவின் அனைத்து தொகுதிகளிலும் எங்களை எதிர்த்து போட்டியிட்ட தேர்தல் கமிஷனின் ஒரே வேட்பாளர்  'நோட்டா' ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" .
..................................................................................................................
 
 நிருபர்:- "சார் உங்க கட்சி வேட்பாளர்கள் எல்லாம் பெரும்பாலும் டெபாஸிட் இழந்துடுவாங்கன்னு பேச்சு அடிபடுதே ?" 


விஜயகாந்த் :- " இப்படியெல்லாம் கேட்டே அடுத்தது நீ அடிபடுவே மரியாதையா ஓடிப்போய்டு..."

...................................................................................................................

"தலைவர் ஏன் புது கேஸ்அடுப்பு கத்தி அரிவாள்மனை..இப்படி கிச்சன் ஐட்டம் எல்லாம் புதுசா வாங்கி வைக்கிறார் ?"


"தேர்தல்ல தோத்துட்டாக்கா அடுத்த 5 வருஷத்துக்கு இவர்தான் கிச்சனை ஆளனும்..... அதான் "
..................................................................................................................

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் அயராத வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 2. தலைவர் ஜெயிச்சா கிச்சன் கேபினெட் மந்திரி ,தோத்தா கிச்சன் தான் கதியா?))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேற என்னங்க பண்றது...தொகுதி பக்கம் தலைவச்சி படுக்க முடியாதே !

   நீக்கு
 3. அனைத்து நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை
  குறிப்பாக படம் போட்டதை மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இனிமைமிகு வாழ்த்திற்கும் வாக்களிப்பிற்கும் மிக்க நன்றிகள்
   ஐயா.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரர்
  தேர்தல் நேரத்தில் நகைச்சுவைகள் எல்லாம் கூடுதல் சுவை பெற்றிருக்கிறது. காலம் அறிந்து பகிரப்பட்ட பதிவு. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மதிப்புமிக்க ரசனைக்கு மிக்க நன்றிங்க ஐயா.

   நீக்கு
 5. நோட்டா' ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை !! ha...haa :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் ஒரு இடத்துல நோட்டாவைவிட காங்கிரஸ் கம்மியா ஓட்டு வாங்கியிருக்கு

   நீக்கு
 6. தயவுசெய்து இதையும் செத்துருங்க.

  தலைவர் : ஏண்டா வாக்காளப் பசங்களா, நோட்டா பட்டன தட்டினா ஏடிஎம் லேருந்து வர்றமாதிரி ரூவா நோட்டா வெளிய வரும்னு நெனச்சீங்களா. அப்டீருந்தா ஒங்கள உள்ளவுடுவோமா.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
 7. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!