உங்களுக்கு
நினைவிருக்கிறதா? பால்யம் முதல் இந்நாள்வரை.
அரைகுறையாக ஞாபகம் வந்தவரை,எனது ஆரம்ப கால வாசிப்புக்கள் முதல் இந்நாள்வரை நினைவுகளில் நின்றவறை.......எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது
‘எல்லாம் சில காலமே’.
காமிக்ஸ் காதலன்:- ஆரம்பக்கட்ட
வாசிப்புகளில் பாடபுத்தகங்களினைத்தாண்டி வாசிக்க ஆரம்பித்தது காமிக்ஸ்
புத்தகங்கள்.
ராணிகாமிக்ஸ்,லயன்காமிக்ஸ்…வாண்டுமாமா..அம்புலிமாமா...முத்துகாமிக்ஸ்....இப்படி
எல்லாமே பிரதானவை. 007...”டுமில்.....டுமில்........மயிரிழையில் உயிர் தப்பினார்” என்பது
இன்றியமையாத வார்த்தையாக இருக்கும்.மயிரிழை என்பது எவ்வளவு துள்ளியமானது
...ஆச்சர்யமாக இருக்கும்!. இரும்புக்கை
மாயாவி த கிரேட் ஹீரோ.... சொய்ங்க் என்று கையை நீட்டி அத்தனை அட்டகாசம் செய்வார்.ஸ்பைடர்மேன்.....காலங்கள்
மாறமாற நமது எண்ணங்களும் ஹார்மோன்களின் மாற்றங்களின் காரணமாகவோ என்னவோ மாற்றங்கள
நிகழ்கிறது.
காமிக்ஸ் உலகம் தாண்டப்பட்டது.சிக்கியவர்கள் தமிழ்வாணன் ராஜேஷ் குமார்...... சுபா...போன்றோர்.
துப்பறியும்கதைகள் பேய்கதைகள்.
.எனக்கும் நண்பர் ஒருவருக்கும் ஒரு வாக்குவாதம் ஒவ்வொரு நாவலுக்கும் நடக்கும் நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவார். யார் கொலையாளி?என்பதை கணடுபிடிக்க வேண்டும்.எப்படித்தெரியுமா? முதல் அத்தியாயம் படிக்க வேண்டும் நடுவில் ஏதாவது இரண்டு அத்தியாயங்களில் சில பாராக்கள் படிக்க வேண்டும். யார் குற்றவாளி என்பதை கதாசிரியர் கற்பனைக்கொண்டு நாம் கண்டுபிடிக்க வேண்டும்.... அநேக முறை நான் சொல்லும் கதாபாத்திரமே கொலையாளியாக இருப்பான். எப்படி அங்கொன்றும் இங்கொன்றும் படித்து கண்டுபிடித்தேன் என்பது ஆச்சரியமாக இருக்கும் அம்புட்டு கில்லாடி கிரைம் நாவல்களில் நானும் அவரும். இதுவும் சில காலமே !
அடுத்தது எழுத்துக்களால் நம்மை கட்டிப்போட்டவர் பாலகுமாரன்.
அநேக இடங்கள் புரிந்து புரியாத யதார்த்த வாக்கியங்கள்..வாழ்க்கை தத்துவங்கள்.சிவசங்கரி அவர்கள் எழுதிய சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது? அநேகமுறை படிக்கப்பட்ட ( திருடப்பட்ட! ஆரம்பம் இந்த புத்தகம் தான் என்று நினைக்கிறேன். பின்னர் சொல்கிறேன் ) புத்தகம். இவர்களும் சில காலமே !
பாக்யா (சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..இது மிகவும் கவரப்பட்ட வாசகம் பாக்கியராஜ் அவர்களின் கேள்வி பதில்கள் பகுதி அட்டகாசமாக இருக்கும்) கல்கண்டு....(50 பைசா புத்தகம் முதல் அநேக விலையேற்றத்திற்குப்பின்னரும் மறக்கமுடியாத பொது அறிவுக்களஞ்சியம்) வாரஇதழ்கள். இதுவும் சில தான்....
அப்புறம் திருமுருககிருபானந்தவாரியார் அடிகள்.(இவர் புத்தகம் சென்னையில் தேடு தேடு என்று தேடி வாங்கியது நினைவில் நிற்கிறது).. தென்கச்சி கோ.சுவாமி நாதன்......லேனா தமிழ்வாணன்.... சுகிசிவம்....
..பாவம் இவர்களும் சில தான்
சுஜாதா.
எல்லோருக்கும்போலவே எனக்கும் இன்றியமையாதவர் ஆகிப்போனார். ஹைக்கூ என்றால் என்ன எப்படி என்பதெல்லாமும் எழுதவும் இவரிடம் கற்றது தான்.
ஒருவரியில் ஒருவார்த்தை கவிதை.எவ்வளவு சுருக்கமாக எழுதமுடியுமோ அவ்வளவு சுறுக்கி...... ரொம்ப கஷ்டம்..அறிவியல் பகுதிகளை விவரித்து...இவருக்கு நச் நச் என்றும் நறுக் சுருக் முதல்எல்லாம் இருக்க வேண்டும். உள்ளூர் முதல் உலகச்செய்திகள் வரை ஒரு கட்டுரையிலே சொல்லும் நயம் ......வெளிப்படையாக பேசிவிடும் எழுத்தாளுமை. தி கிரேட்.
இந்த வாசிப்பும் சிலகாலமே !
இப்படி ஏகப்பட்ட வாசிப்புகள் தொடர்ந்து.........................................................................................................................
திருடப்பட்ட !
புத்தகச்சொந்தங்களுள் முக்கியமானவர் மறைந்த திரு தம்புசாமி ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி.
வாசிப்புகளில் மன்னன். என்ன வேண்டும் என யாராவது கேட்டால் புத்தகம் என்று மட்டும் சொல்லும் வாசிப்பின்தீவிரவாதி.
பெட்டிகள் நிறைய புத்தகங்கள் ஆனால் யாராவது கேட்டால் நோ என்றுரைக்கும் தடாலடி லத்திக்காரர். இங்கியேயே படிச்சுக்கோ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று கூறி விடுவார்.நாங்க என்ன லேசுபட்ட ஆளுங்களா? வயிற்றில் ரெண்டு தோட்டத்தில் ரெண்டு என அவர் கண்ணை மறைத்து திருடிக்கொண்டுப்போய்விடுவோம்.மனுஷன் அடுத்த நாள் போனால் டேய் சிங்கு (கிங் யை சிங் என்று தான் அழைப்பார்.........குறும்பு.) [இதனுடைய தாக்கம் தான் கிங் VS சிங் என நினைக்கிறேன] அந்த புத்தகத்தினை எடுத்து வந்து கொடு என்பார். போலீஸ் புத்தி கண்டுபிடித்துவிடும்.
நாம தான் புது திருடன் ஆச்சே கொடுத்துவிடுவோம். ஆனால் இன்றும் என்னிடம் இருக்கும் அந்த சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது இவரிடம் திருடியது இல்லை.திரு ரமேஷ் ஆசிரியரிடம் சுட்டது.
சொல்லிக்கொண்டே போனால் சுமையாகிவிடும்.
அப்புறம் சிலகாலம் ஓவியம் தீட்டுதல் ...கவிதை எழுதுதல்...சிறுகதை எழுதுதல் இப்படி எல்லாம் கைவிடப்பட்டு
இப்படி எல்லாமே
சிலகாலம் மட்டும் நம்மோடு வாழ்ந்து வாழ்வித்து இப்ப கொஞ்ச நாளைக்கு முன் கால மாற்றத்தின் கோலத்தால்.. ...ஃபேஸ் புக்.
அதுவும் மாற இப்ப பிளாக்///இதுவும் எனக்கு சில காலமே என்று எண்ணத்தோன்றுகிறது....
விரைவில் என் வலைப்பக்கம் மூடுவிழா காணும் என்று நினைக்கிறேன்
அடுத்தது என்ன...?
கால தேவனின் காய் நகர்த்தலுக்குப்பின் தான் தெரியும்.
இதனால் சகலமானவருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்
எல்லாம் சில காலமே..!
எல்லாமே!!!
என்று எண்ணத்தோன்றுகிறது.உங்களையும்
எண்ணிப்பாருங்கள்
புரியும் என்று நினைக்கிறேன்.
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பது எவ்வளவு பெரிய உண்மை.
.கொஞ்சம் கடைபிடித்துதான் பாருங்களேன்!.
சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்.......................
.கொஞ்சம் கடைபிடித்துதான் பாருங்களேன்!.
எதுவும் கடந்து போகும்...
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குநீங்கள் சொல்வதும் சரிதான்
பதிலளிநீக்குஎல்லாமே யோசித்துப்பார்த்தால்
சில காலமே கவர்ச்சித் தருகிறது
என்பது புரிகிறது
சொல்லிச் சென்ற விதம் அருமை
வாழ்த்துக்கள்
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா,
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குவாக்களிப்பிற்கும் மிக்க நன்றிகள்
நீக்குபுரிகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் ஐயா.
நீக்கு