செவ்வாய், மே 13, 2014

கிங்ஸ் ன் ....            1. உலகில் சொல்லி கொடுக்கும் நண்பர்களைவிட மில்லி கொடுக்கும் நண்பர்களே அதிகரித்துகொண்டு இருக்கிறார்கள்.


2. கிவ் அண்ட் டேக் பாலிசிகள்;  நான் காது குத்துக்கு மொய் வைத்தால் நீ கல்யாணத்துக்கு திருப்பி வைக்கணும். நான் உனக்கு லைக் போட்டால் நீ எனக்கு லைக் போட்டே ஆகணும்...... இவையும் இந்த பாலிசிகளில் அடங்குமோ?.


3. கத்தி கபடா போன்ற ஹார்ட்வேர் வைச்சிருந்தா மட்டும் பெரிய ஆள் இல்ல. சாப்ட்வேர் படிச்சிருந்தாலும் பெரிய ஆள் தான்.


4. நம்ம பிறந்த நாளை நாமே கொண்டாடுவது சப்பைமேட்டர்.
நம்ம பிறந்த நாளை நாடே கொண்டாடுவதுதான் சூப்பர் மேட்டர்.


5. நல்லா படிக்கிறது பெரிய விஷயம் னா
நல்லதையே தொடர்ந்து படிக்கிறது அதைவிட பெரிய விஷயம்.


6. வண்டியை வேகமா ஓட்டுவது இருக்கட்டும்
விவேகமா ஓட்டப்பழகுங்க.


7. என்னதான் ஆயிரம்ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆப்பிள் ஐபேட் வாங்கினாலும் அவசர பசிக்கு ஒரு கடி கூட கடிச்சிக்க முடியாது.

8. ஹெல்மட் போடாம வண்டி ஓட்டுனா மண்டை காயம் ஏற்படலாம்
அதுக்காக சைக்கிள் ஓட்டுறவன் எல்லாம் ஹெல்மட் போட்டுனுபோனா நம்ம மண்டைகாயும்.

9. என்னதான் விஜய் ஃபேனாக இருந்தாலும் நீங்க 'தல' இல்லாம முண்டமா வாழ முடியாது.

10.  நீங்க ஏதாவது தத்துவம் சொல்லுங்க .

4 கருத்துகள்:

 1. #நீங்க ஏதாவது தத்துவம் சொல்லுங்க .#
  இதுக்கு மேலேயும் தத்துவம் சொல்ல முடியுமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அறுத்ததுபத்தாததுனு தான் உங்களையும் கலந்துக்கொள்ளச்சொல்கிறேன் நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. மிக்கநன்றி ஐயா.ஆவலுடன் காத்திருக்கிறேன்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!