ஞாயிறு, மே 11, 2014

புது கம்பெனி“எங்க வீட்டுல ராமசாமிகிரைண்டர்.... ராமசாமிமிக்ஸி..... ராமசாமிவாஷிங்மெஷின் எல்லாம் இருக்கு அப்படினு பெருமையா சொல்றாளே...நான் அப்படி ஒரு கம்பெனி பேர கேள்விபட்டதே இல்லையே “


 “ அட! அவ புருஷன் பேரு ராமசாமி யாம். அவருதான் எல்லா வேலையும் செய்வாராம் அதைதான் இப்படி சொல்லிட்டுப்போறா “


………………………………………………………………………………


“மனைவித்தொல்லை தாங்க முடியல அதனால பளார் பளார் னு கன்னத்துல அறைஞ்சுட்டேன் “


“அய்யய்யோ! அவ உன்ன சும்மாவா விட்டா? “


“ நான் அடிச்சது கனவுல தானே “


“அதானே பாத்தேன் “

.........................................................................................................

"மருமகளை யோகா கிளாஸ்க்கு அனுப்பியது ரொம்ப தப்பா போச்சு "


"ஏன் என்னாச்சு?"


"கிளாஸ்க்கு போக ஆரம்பிச்சதில் இருந்து சண்டைக்கே வரமாட்றா "

.......................................................................................................

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!