வியாழன், மே 01, 2014

உழைப்பே உயர்வு தரும்.உழைப்பில் உறுதி உடையவரே

உன்னத உலகில் உயர்ந்தவராம்

உழைப்பை மட்டும் நிறுத்திவிட்டால்

உருண்டை பூமியில் ஒன்றுமில்லை.


ஓர்தொழில் ஒன்றை உனதாக்கு

ஒளிவீசும் உன் வாழ்க்கையது

நெற்றிவியர்வை நிலத்தில் விழ

நிச்சயம் காண்பாய் பலன்பலவே.எல்லாம் தொழிலே; எதுவும்

இளைப்பில்லை இப் புவியில்

சொல்லால் மட்டும் இல்லாமல்

செயலில் அதை நீகாட்டு.நீதி நேர்மை நியாயம்

நின் வழி என்றால்

நிகர் இல்லை உனக்கு

நெடுவழியெங்கும் நீடிக்கும் இன்பம்.உழைக்க நீ மறுத்துவிட்டால்

உறங்கிப்போகும்  உன் வாழ்க்கை

தேங்கிய குட்டை நீர்போல

நாற்றம் காணும் காலமெல்லாம்.


கடின உழைப்பை கைகொண்டால்

காலம் உனது காலடியில்

உழைப்பை மட்டும் நீநம்பு

உலகம் உன்னை சுற்றிவரும்.அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.


8 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  உழைப்பாளர் தினத்தில் கவியை படித்து இன்புற்றேன்.... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
  என்பக்கம் கவிதையாக.

  எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றிகள். தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 2. சிறப்புக் கவிதை அருமை
  மேதின நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் நல்வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

   நீக்கு
 4. உழைப்பு மனிதனை ஏமாற்றவதில்லை என்பதை அழகாகச் சொன்னீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்தளிப்பிற்கு மிக்க நன்றிகள் ஐயா. தங்களுக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!