கிங்:- “இவரை அடகு
வச்சிகினு ஒரு பத்தாயிரம் ரூபாய் காசு கொடுங்க”
சிங்:- “மனுஷனை
எல்லாம் அடகு வைக்க முடியாது “
கிங்:- “இவருதான்
அடிக்கடி பாட்டு பாடறார்..... ‘பொதுவாக என் மனசு தங்கம்’ அப்படினு அதான் கேட்டுப்பார்த்தேன் “
.......000000000000............
Vs
சிங் :- “நான் திருப்பதிக்கு
மொட்டை அடிக்க போயி இருந்த அப்ப பெரிய பிரச்சனை ஆயிப்போச்சு”
கிங்:- “இப்படி ‘மொட்டையா’ சொன்னா எப்படி விவரமா சொல்லு”
.........................0000000000000...........................................
சிங்:- அந்த ராஜா
எவ்ளோ பெரிய சக்கரவர்த்தி இருந்தாலும் எல்லோரும் அவரை ‘சின்னராஜா’னு தான் சொல்றாங்களே...பாவம் அவர். “
கிங்:- “அதெல்லாம்
ஒண்ணும் இல்லே, அவரு பெயரே சின்னராஜா தான் அதான் அப்படி சொல்றாங்க”
...............................000000000000000000000000..................
சிங்:- “நான் நைட் டூட்டிக்கு
போகணும் அப்படினு சொல்லிட்டு அவசரமா கிளம்பிப்போறாரே அவர் எந்த கம்பெனியில வேலை
பாக்கிறார்?”
கிங்:- “அட அவரு
தூங்கப்போறதை தான் அப்படி சொல்லிட்டுப்போறாரு. அவரும் வெட்டிஆபிசர் தான் “
...........................000000000000000000.......................................
கிங்:- “முடித்திருத்தும்
கடையில என்ன சண்டை நடக்குது ?”
சிங்:- “’மொட்டைமாடி’க்கு முடி வளர்ந்துடுச்சி நீ தான் வந்து திரும்ப
மொட்டை அடிக்கனும் அப்படினு ஒரு குடிகாரர் வந்து சண்டை வளக்கிறார்”
கிங்:- ???
..........................00000000000000000................................
சிங்:- “படிக்கத்தெரியாத
அப்பா அம்மா இருக்கிறது ரொம்ப நல்லதா போச்சுடா”
கிங்:- “எப்படி?”
சிங்:- ‘நான்
கம்பியூட்டர்ல ஃபேஸ்புக் படிக்கனும் கொஞ்சம் காசு வேணும்னு கேட்டா உடனே கொடுத்திடறாங்கடா”
கிங்:- “இப்படித்தான்
ஊர்ல பலபேர் காலேஜ் ல அது இதுனு தெரியாத விஷயத்தை சொல்லி காசு வாங்கினுப்போறாங்க
பசங்க, பாவம் டா அந்த அப்பா அம்மா.”
..........................................00000000000000000000000000.............................
கிங்:- “குஜராத்துல
டீ சுத்தமா நல்லாவே இருக்காதுடா”
சிங்:- “குஜராத்துக்கு
நீ எப்படா போன?”
கிங்:- “நான் எங்க
போனேன், ரஜினி, விஜய் கூட டீ குடிக்க மோடி தான் நம்ம தமிழ்நாட்டுக்கு வர்ராரே ! அதை வைச்சி தான் சொல்றேன் “
.................000000000000000.........................
மொட்டை ஜோக்ஸ் ஹிஹி...
பதிலளிநீக்குமோடி டீ ஹா... ஹா...
நன்றி அண்ணார் அவர்களே !
நீக்குயார் ஜெயித்தாலும் தோற்றாலும் கிங் vs சிங் ஆட்டம் பிரமாதம் !
பதிலளிநீக்குத ம 3
நன்றி ஜி !அவர்களே !!
நீக்கு