திங்கள், ஏப்ரல் 21, 2014

பில்கேட்ஸ் அவர்களே உண்மையா....?


சோம்பேறிகளினால் பல்வேறு பிரச்சனைகளுக்கு பலவித குறுக்கு வழிகள் மூலம் எளிதில் சாமர்த்தியமாக தீர்வுகள் கண்டறியப்படுகின்றன எனவே இந்த மாதிரி ஆட்களைத்தான் நான் எனது பணிக்கு தேர்வு செய்வேன் இப்படி சோம்பேறிகள் பற்றி அமெரிக்க பில்கேட்ஸ் அவர்கள் கூறியதாக கேள்விப்பட்டேன். அப்பொழுது சிரித்துக்கொண்டேன் அட சோம்பேறிகள் என்னத்த செய்வார்கள் என்று. அனுபவிக்கும்பொழுதான் புரிந்தது.
      


இங்க, எப்படினு? உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? பின்வரும் உதாரணங்கள் உங்களுக்கு அந்த சந்தேகங்களை தீர்க்கும்.


சோம்போறித்தனம் 1.

சாதாரணமான ‘டேபிளை கம்பியூட்டர் டேபிளாக மாற்றுவது எப்படி ?

 

எனது வீட்டில் இந்திய வடிவமைப்பான இரும்பு டேபிள் இருந்தது...இது இல்லாமல் மர டேபிள்கள்....கணினி வாங்கியவுடன் அதற்கான கணினிமேசை, நாற்காலி வாங்கலாம் என்று நினைத்தபொழுது சரி அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் என தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஏற்கனவே நிறைய டேபிள்கள் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கிறது என்ற சங்கடங்கள் வேறு. (இதுமாதிரி வேலைகளை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வது ஒருவித சோம்பேறித்தனம்). பிள்ளைகள் கேட்டு கேட்டு பார்த்துவிட்டு கேட்பதை நிறுத்திவிட்டார்கள்.
ஒருநாள்....
நாற்காலி பின்னும் ஒயர் கண்ணில் தென்பட்டது. நாற்காலி பின்னிவிட்டு மீதம் இருந்தவை. ஆம் இதுகூட சரியான யோசனை தான் என்று எடுத்தேன் அவற்றை. மேசைக்கு அடியில் எப்படி முடியுமோ அப்படிஇப்படி எல்லாம் வலைத்து பின்னிவிட்டேன்.மேசைமேல் உட்கார்ந்து எளிதாக எழுத.....எழுதுபலகை ஒன்று இருந்தது அதனை எடுத்து வைத்தால் கனகச்சிதமாக பொருந்திக்கொண்டது. இப்பொழுது கீ போர்ட் வைக்க மிகச்சிறந்த இடம் கிடைச்சாச்சு. வீட்டிற்கு வந்த அன்பர் ஒருவர் யப்ப்ப்ப்ப்ப்ப்பா.. பயங்கரமான ஆளுடா என்று சிரித்துவிட்டுப்போனார். ஒருவேளை கஞ்சன் என்று நினைத்திருப்பாரோ ?
கஞ்சன் னா இப்படித்தான் இருப்பாங்க.
“என்னடி தேனிலவுக்கு எங்கடிப்போன?
“அடிப்போடி இவளே ,அதை ஏன் கேக்குற?
“ஏன் என்னடி ஆச்சு?
“எங்க வீட்டுக்காரர் மகா கஞ்சனா இருக்கார். தேனிலவுக்கு ஊட்டி,கொடைக்கானல்.... போகலாம்னு சொன்னா... அய்யோ ரெண்டுபேர் போனா அதிகமா செலவு ஆகும் அதனால நீ மட்டும் போயிட்டு வா அப்படினு சொல்றாருடி

இது தான் கஞ்சம்.
இப்ப சொல்லுங்க. 
எனது சோம்பேறிதனத்தால் லாபமா? நட்டமா?. 
மேசை வாங்குகிற செலவு மிச்சம் & புதிய ஒரு கண்டுபிடிப்பு.


சோம்பேறித்தனம் 2.

ஒருநாள் இரவு குளியளறையில் மின் விளக்கு எரியவில்லை.ஒரே ஒரு பல்ப் அதுவும் எரியவில்லை காலையில் எழுந்தவுடன் முதல் வேலை அதுதான் செய்யவேண்டும்  என்று நினைத்தால் இன்னைக்கு வேலைக்கு போக வேண்டும்...... நாளைக்கு போட்டுக்கொள்ளலாம் நாளை விடுமுறை தானே என்று வழக்கம்போல (நோட் த பாயிண்ட்ஸ்) தள்ளிப்போட்டாச்சு. இன்னைக்கு காலைப்பொழுது ஓடி மதியம்  நல்ல வெயில் நேரம் மேசை போடு பல்ப்பைபிடி உயரம் பத்தல அப்படி இப்படி என்று துணைக்கு எல்லோரையும் அழைத்து...ஏன்னா பாத்ரூம்ல டேபிள் வழுக்கிக்கொண்டே போகுது...... அதபிடிக்க ஒரு ஆளு.... எப்படியோ மாட்டிடலாம் என்று மாற்றிவிட்டேன்.

ஒரு பல்ப் இருப்பதால் தான் இத்தனை கஷ்டம் இன்னொன்றையும் ஒருவழியா மாட்டிலாம் என்று முடிவுச்செய்தால்......( அப்பதாங்க ஒன்னு பியூஸ் போனாலும் அத எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப [சோம்பேறித்தனம்] வேணும் னாலும் மாற்றிக்கொள்ளலாம் அதான் வேற பல்ப் இருக்கில்ல...).
பாத்தாக்கா அங்க ஓல்டர் இல்லை. கடைக்கு போகணும் வெயில் நேரம் . பழைய ஓல்டர் மாட்டிடலாம் அப்படினு எடுத்தாக்கா அது கிறிஸ்த்துமஸ் ஸ்டார் கட்டிய ஓல்டர்..அதனைமாட்டி கனைக்க்ஷன் கொடுத்தாக்கா பல்ப் சுவற்றில் மோதிக்கொள்கிறது.... இதனால் பல்ப் ஏதாவது ஆகுமோ? காற்றில் ஆடி சுவற்றில் மோதி உடைந்து.....அல்லது உடைந்து  தலையில் விழுந்து விடுமோ?....பயங்கர கற்பனை.....

ஆனா பாருங்க எதையாவது எழுதனும்னு உட்கார்ந்தா ஒரு மண்ணாங்கட்டியும் ஞாபகத்திற்கு வர மாட்டேனு அடம்பிடிக்கும்.
என்னச்செய்யலாம்?
அதற்க்கு ஹேடோ ஒண்ணு மாட்டனும். கொஞ்ச வருடங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த மாடல். குண்டு பல்ப்பிற்கு மேல் பிளாஸ்டிக்கால் ஆன வட்டவடிவில் அழகிய வண்ணங்களில் இருக்கும். அதை போய் வாங்கிக்கொண்டு வந்தால் வேலை முடிந்தது. ஓல்டரில் மாட்டி தொங்கவிட்டுவிடலாம்.இப்ப பல்ப் சுவற்றில் உராய்வது இருக்காது. ஓகே. சட்டைகிட்டை மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன்..
அப்ப கண்ணில் பட்டது சிடி டிஸ்க். அட !!!???
நம்ம வில்லேஜ் விஞ்ஞானி மூளை அதிவேகமாக வேலை செய்து ...
சட்டையை கழட்டி வைக்க சொன்னது. 


ஒரு பழைய சிடி டிஸ்கை எடுத்தேன் அதன் நடு வட்டத்தை தேவையான அளவுக்கு கொஞ்சம் பெரிதாக்கினேன். ஓல்டரில் மாட்டியாச்சு. சிம்பிலா....! பார்க்க கொஞ்சம் வித்திசமாக அட்டகாசமாகத்தான் இருக்கு. பெட்ரொல் செலவு மிச்சம்..... பொருள் வாங்கும் காசு மிச்சம். அது பழைய மாடல் வேற கிடைக்குமோ? கிடக்காதோ? அலைச்சல் மிச்சம்....
கிடைக்குமோ? கிடைக்காதோ? இதை எழுதும்போது ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.

இந்தியாவில் பல அடுக்குமாடிக்கட்டிடம் ஒன்று கட்டி திறப்பு விழாவிற்கு ஜப்பான் நாட்டுக்காரரை விருந்தினராக அழைத்து அந்த கட்டிடத்திற்கு பெயர் சூட்டச்சொன்னார்களாம் அவரும் “நிக்குமோ? நிக்காதோ? அப்படினு பெயர் வைச்சாராம்..... நிக்கி... நிக்காடோ.... அப்படி இப்படினு ஜப்பான் நாட்டுல பெயர் இருக்கும் இல்லையா... அது மாதிரி “நிக்குமோ? நிக்காதோ?  ஆனா நம்மளுக்கான அதன் அர்த்தமே வேற.
அத விடுங்க.......