வெள்ளி, ஏப்ரல் 18, 2014

மிளகு-pepper-மருத்துவம்.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்

என்பது பழமொழி. இது எவ்வளவு நச்சுத்தன்மையையும் நீக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதுபோன்ற மிளகின் மருத்துவ குணம் நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு எளிய மற்றொரு பயன்பாடும் உள்ளது.

 

மேடையில் பேச வேண்டும் அல்லது எதையாவது வாசிக்க வேண்டும் எனும்பொழுது சிலருக்கு சளி தொல்லையாலும் மற்ற காரணத்தினாலோ பேசவோ வாசிக்கவோ முடியாது. கரகர என்று கேட்பதற்கு சற்று வித்தியாசப்படும்...அப்படி வாசித்தாலும் பேசினாலும் அடுத்தவரின் நகைப்பிற்கு ஆளாகக் கூட நேரிடலாம்.முக்கியமான நேரத்தில் உங்கள் கருத்துக்களை வெளியிட நீங்களேகூட குரல் சரியில்லை என்று  கூச்சப்பட்டுக்கொண்டு இருந்துவிடலாம்.

இதனைப்போக்க எளிய மருந்து..... மிளகு.

நீங்கள் பேசுவதற்கு அல்லது வாசிப்பதற்கு  சுமார் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்பு 5அல்லது 6 மிளகினை வாயில் அடக்கி அல்லது மென்று விழுங்குங்கள்....(நான் கடைபிடிக்கும் எளிய வழி. 100 க்கு 1000 சதவீதம் பலனளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் கியாரண்டி வாரண்டி எல்லாம் தருகிறேன்...)

அடுத்து நீங்கள் பேசும்பொழுது உங்கள் கரகரத்த குரல் காணாமல் போச்சு.. போயே போச்சு...இட்ஸ் கான்....எல்லாம் போயிந்தே...... என அதிசயப்படுவீர்கள். 

அரசியல்மேடை பேச்சாளர்களே கவனிச்சுக்கோங்க... பாவம் பொய் பேசி பேசி புண்ணாகிப்போய் இருக்கும் உங்கள் தொண்டை. கம்மிப்போயிருக்கும் குரல்வளம்... 
ஏதோ என்னால் முடிந்த சின்ன டிப்ஸ் உங்களுக்காக.
மிளக எடுங்க வாயில் போடுங்க.
இப்ப மேடையில் பேசிப்பாருங்க அல்லது பொது இடத்தில் வாசித்துப்பாருங்கள்....


              எல்லோருக்கும் சொல்லுங்க !

 
சும்மா..எம்ஜியார் மாதிரி என்னா அழகா பேசுவீங்க தெரியுமா ? !.


பேசுங்க கலக்குங்க.

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் பயன்படும் தகவலை
    பதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்திற்க்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. தங்களின் மேலான அழைப்பிற்க்கு மிக்க நன்றிகள். அவசியம் பகிர்கின்றேன்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!