சனி, ஏப்ரல் 19, 2014

சோறா? சப்பாத்தியா ?

ஒருநாள் தொடர்வண்டியில் ஒரு தமிழரும் சர்தார்ஜி ஒருவரும் பயணம் செய்தார்கள். தமிழர் பார்க்க கொஞ்சம் நோஞ்சானாக இருந்தார். ஒல்லியான உடல்வாகு. சர்தார்ஜி வாட்டசாட்டமாக இருந்தார். அவருக்கு தமிழரைக்கண்டதும் அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது.


சர்தார்ஜி;- “தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள்?
தமிழர்;- “சாதம் “
சர்தார்ஜி:- “அதான் இப்படி இருக்கிறீர்கள், சப்பாத்தி சாப்பிட்டுப்பாருங்கள் என்னைமாதிரி வலுவாக இருப்பீர்கள் “
தமிழர் :- “சரிங்க
தமிழர் அவரது பெட்டியை கடினப்பட்டு தூக்கி வைக்கிறார். சர்தார்ஜி அதனை மிக எளிதாக நகர்த்தி வைத்துவிட்டு அதுக்குத்தான் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன் என்று கூறி தன் கையை மடக்கி புஜபலத்தை காண்பித்து நக்கலாக சிரித்தான். இப்படியாக பலமுறை தமிழரை  சோறு சாப்பிடுபவன் என்று மட்டம் தட்டி பேசிக்கொண்டிருந்தார். தமிழருக்கு எரிச்சலாக இருந்தது. அவருக்கு சரியான பதிலடி கொடுக்க நினைத்தார்
தமிழர்.
 ஆபத்து நேரங்களில் உடனடியாக தொடர்வண்டியை நிறுத்தும் ‘அவசரச்சங்கிலி அருகே சென்று அதனை இழுப்பதுபோல் பாசாங்கு செய்தார். இதனை கவனித்த சர்தார்ஜி அதனை வேகமாக இழுத்து ‘அதுக்குத்தான் சப்பாத்தி சாப்பிடனும் அப்படினுச்சொன்னேன் என்றார்.

தொடர்வண்டி நின்று விட்டது. அனைத்து அதிகாரிகளும் வந்து சங்கிலியை யார் இழுத்தது இழுக்கப்பட்டதற்காண காரணம் கேட்க....அனைவரும் சர்த்தார்ஜி தான் இழுத்தார் எனச்சொல்ல....

சர்தார்ஜி முழித்துக்கொண்டிருக்க.....

 அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழர் மெதுவாக சர்தார்ஜியிடம் சொன்னார் “இதுக்குத்தான் சோறு சாப்பிடணும்..சோறு சாப்பிட்டா மூளை நல்லா வளரும் அப்படினு சொல்றது" என கூறிவிட்டு வேகமாக நடந்தார்.


14 கருத்துகள்:

 1. அருமையான பதிலடி
  இனி சர்தார் சப்பாத்தி சாப்பிடுவது கூட
  சந்தேகம்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான வருகைக்கும் வாக்களிப்பிற்கும் நன்றிகள் பல ஐயா.

   நீக்கு
 2. இது ஏற்கனவே படித்து ரசித்தது என்றாலும்,தினசரி பதிவு போடும் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. எழுத்துப்பிழையால் மேற்படி பதில் நீக்கப்பட்டது. வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

   நீக்கு
 4. பதில்கள்
  1. நாமலும் எல்லாம் சாப்பிட்டுப்பார்த்தாச்சு ஹூம் ஒரு பலனும் இல்ல.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!