வெள்ளி, ஏப்ரல் 18, 2014

பலே கில்லாடி
“டாக்டர வேட்பாளரா நிக்க வச்சது ரொம்ப தப்பா போச்சி

“ஏன்?

“பொதுகூட்டத்துல....... உங்க எல்லாருக்கும் காலரா வரணும், சிக்கன்குன்யா வரணும், மலேரியா வரணும், எய்ட்ஸ் வரணும், பன்றி காய்ச்சல் வரணும்,  அப்ப நீங்க எல்லாரும் எங்கிட்ட வாங்க நான் இலவசமா ஊசி போடுகிறேன் அப்படினு பேசறார்

“அடப்பாவி
இவன் இலவசமா ஒரு ஊசி போடறதுக்கு நாம எல்லோரும் நோய் வந்து சாகனுமா?

............................................................................................................................................................

“அரசியல் கூட்டத்துல ஏன் தள்ளு வண்டியில தக்காளி, முட்டை எல்லாம் விக்கிறாங்க?"

“தலைவர்கள் பேசும்போது எப்படியும் மக்கள் எதையாவது வீசுவாங்க...அதனால நம்ம தலைவரே, அவர் தக்காளி மண்டியில இருந்து இறக்கி விக்க வைச்சுட்டார்..முட்டையும் அவர் பண்ணையில இருந்து தான் விக்கிறாங்களாம்.....முட்டை, தக்காளி வித்தா மாதிரியும் ஆச்சு மீட்டிங்ல பேசனா மாதிரியும் ஆச்சு...மக்கள் அடிச்சா மாதிரியும் ஆச்சு “

“நம்ம தலைவர்தான் பலே கில்லாடி ஆச்சே ! "
...........................................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!