வியாழன், ஏப்ரல் 17, 2014

கடியோ.... கடி !

"நரைத்த தலைமுடிகாரர்களுக்கு பிடித்த காய் எது?"

"வெண்'டை'க்காய் "
                                              .....000....."அரசியல்வாதிகளுக்கு பிடிச்ச உணவு எது?"

" 'ஓட்ஸ்' உணவுகள் தான் "


                                             .....000.....

"இலங்கை காரர்களுக்கு பிடித்த காய் எது ?"

"புட'லங்கா'ய் "

                                            .....000.....


"நகைக்கடைக்காரருக்கு பிடிச்ச காய் எது?"

" 'கேரட்' தான்"

                                           .....000......

 "பைண்டிங் கடைக்காரருக்கு பிடித்த விலங்கு எது ?"

" 'ஒட்ட' 'கம்'"

                                        .....000.....

"ஆசிரியர்களுக்கு பிடித்த தானியம் எது ? "

" கம்பு "

                                         ......000.....

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!