புதன், ஏப்ரல் 16, 2014

அம்மா... தாயே! அய்யா.... சாமி!

  
பிரதமரைப்பார்த்து
முதலமைச்சர் கும்பிடனும்

முதலமைச்சரைப்பார்த்து
மந்திரிகள் கும்பிடனும்


மந்திரிகளைப்பார்த்து
எம் எல் ஏ க்கள் கும்பிடனும்

எம் எல் ஏ க்களைப்பார்த்து
மாவட்டங்கள் கும்பிடனும்

மாவட்டங்களைப்பார்த்து
வட்டங்கள் கும்பிடனும்

வட்டங்களைப்பார்த்து
தலைவர்கள் கும்பிடனும்

தலைவர்களைப்பார்த்து
வார்டுகள் கும்பிடனும்

வார்டுகளைப்பார்த்து
உறுப்பினர்கள் கும்பிடனும்

இவங்க எல்லாரும் சேர்ந்து
உங்களை கும்பிடுவாங்க

அம்மா... தாயே! அய்யா.... சாமி!
ஓட்டுப்பதிவு முடியும் வரை.


நம் கையில் மை இட்டப்பின்
மாறிப்போகும் இவர்கள் முகம்

அய்யா... சாமி.... என்றவன்
அடப்போடா இவனே என்பான்

ஆட்காட்டி விரலில்
அழியா மை ஏறியதும்
பைத்தியக்காரன்கூட 
உன்னை
திரும்பிப்பார்க்க மாட்டான்.

தெளிவாய் சிந்திக்கவில்லையெனில்
சிந்த வேண்டி இருக்கும்
சிற்றாறாய் ஐந்தாண்டுகள் வரை

 கண்ணீரை!.

4 கருத்துகள்:

 1. உண்மையை மிக அருமையாக உணர வைத்த கவிதை வரிகளுக்குப்
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிகள் பல.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!