ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

வடிவேலு இப்ப கேப்டன் பக்கம்…..
 வடிவேலு இப்ப தேர்தல் பிரச்சாரம் செஞ்சா இப்படி இருக்குமோ?

 
"மோடிக்கு மட்டும் தான் அலைவீசுகிறதா?... எங்கள் கேப்டனுக்கு அலையல்ல சுனாமியே வீசுகிறது என்பதை இந்த பொன்னான நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். மோடி என்ன பெரிய கேடியா? எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்பதை நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.ச்சே! இப்ப கேப்டன் மோடி பக்கம் இல்ல!........ அட இல்லையா? ஆமாவா? ஏன்யா இப்படி குழப்புது.

இதனால் நான் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் அரசியலை விட்டுபோறேன், நான் அரசியலை விட்டுபோறேன், நான்அரசியலை விட்டுபோறேன்.இனிமே நான் அவரு பக்கம் தலைவச்சிகூட படுக்கமாட்டேன்... அவரு எப்படி வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளட்டும். மனுஷன கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்க விடுங்கப்பா.
பேச்சு பேச்சா தான் இருக்கனும், கைப்புள்ள எடுறா வண்டிய.


ஒரு சர்தார்ஜி ஜோக்ஸ்.
 


ஏழாவது மாடிக்கு போக சர்தார்ஜி சென்றார்.

“என்னப்பா லிப்ட் ஒர்க் ஆகலியா ?

“ஆமா சார் கொஞ்ச நேரம் ஆகும்

" சரிப்பா "

சர்தார்ஜி மாடிப்படிகட்டுகளின் வழியே ஆறாவதுமாடி வரை ஏறி விட்டார்.
எதிரில் வந்த எலக்ட்ரிஷியன் சொன்னார்,

 “சார் லிப்ட் சரியாயிடுச்சு

"சரிப்பா "

வழியில் வேலைகளை முடித்து  எலக்ட்ரிஷியன் இரண்டாம் மாடி படிகட்டுகளில் வந்துக்கொண்டிருந்தார்.அங்கே சர்தார்ஜி உட்கார்ந்துக்கொண்டிருந்தார்.

“என்ன சார் ஏழாவது மாடிக்கு போகிறேன்னு சொன்னீங்க? “

“அட ஆமாம்பா, நீதான் லிப்ட் சரியாயிடுச்சுன்னு சொன்னியே அதான் கிரவுண்ட் புளோர் போயி லிப்ட் டிலேயே 7 வது மாடிக்கு போயிடலாம்னு இறங்கி வந்தேன் மூச்சு வாங்குது அதான் கொஞ்சம் உட்கார்ந்து இருக்கிறேன்

எலக்ட்ரிஷியன்: ???? !!!!!!!

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!