திங்கள், ஏப்ரல் 28, 2014

நான் சொல்றது காதுல விழுந்துச்சா?அட ‘க வ ‘கு வா போட்டதுக்கா இந்த ரகளை.

 “ஏன்டா உங்க அப்பா உன்னைப்போட்டு அந்த அடி அடிச்சாரு?

“அவருபேர ‘மணிகண்டன் அப்படினு எழுதரதுக்கு பதிலா ‘மணிகுண்டன் அப்படினு எழுதிட்டேன் அதான் அவருக்கு கோபம் வந்துடுச்சு


.........................................................................................................................................................

சர்தார்ஜி;-“இந்த டிரைனை ஓட்டுற டிரைவர் ஒன்னும் சரியில்லே “

“ஏன் அப்படி சொல்றீங்க?

சர்தார்ஜி;- “பின்ன முன்னாடி போற டிரைனை ஓவர் டேக் பண்ணி சீக்கிரம் போனாதானே...பஸ் எல்லாம் எப்படி ஓவர்டேக் பண்ணி போறாங்க

.......................................................................................................................................................

“வாயை மூடி பேசவும் அப்படினு படத்துக்கு பேர் வச்சது ரொம்ப தப்பாப்போச்சு

“ஏன்?

“பத்திரிக்கை விமர்சனத்துல படத்தை....... கண்ணைமூடி பார்க்கவும், பாடலை..... காதைமூடி கேட்கவும் அப்படினு எழுதராங்க
....................................................................................................................................................

“காதுல என்னடா காயம்?

“பொண்டாட்டிகிட்ட அவ சொல்றது காதுல சரியா விழலனு சொன்னேன்

“அதுசரி, அதுக்கு ஏன் காதுல கட்டுபோட்டிருக்க?

“காதுமேல கரண்டிய விட்டு அடிச்சு இப்ப நல்லா விழுந்தாச்சு கேட்டா...அதான் மருந்து போட்டிருக்கேன் .
.....................................................................................................................................................

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் இரசிப்பிற்கு மிக்க நன்றி அண்ணார் அவர்களே1

   நீக்கு
 2. படிப்பதற்கு அருமையாய் இருந்ததால் கண்ணை மூடிக்கிட்டு த ம வோட்டுப் போட்டுட்டேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி அருமையாய் கருத்திட உங்களால் மட்டும் எப்படி முடிகிறது.....நன்றி ஜீ !

   நீக்கு
 3. அருமை அருமை
  குறிப்பாக சினிமா குறித்த நகைச்சுவை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பிற்குறிய ஐயா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் வாக்களிப்பிற்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!