ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

நுனிப்புல்





நுனிப்புல் மேயும் மாடு கேள்விப்பட்டதுண்டா நீங்கள்?

இப்படிப்பட்ட மாடுகள்  எல்லா இடங்களுக்கும் சென்று மேயும்,ஆனால் நுனிப்புல்லை மட்டும் கடித்துத்தின்றுவிட்டு உடனடியாக அடுத்த இடத்திற்கு சென்றுவிடும்.இப்படியாக பல இடங்களில் மேய்ந்தாலும் இறுதியில் பார்த்தால் அதன் வயிறு நிறைந்திருக்காது.

இப்படித்தான் இருக்கிறார்கள் சில இளைஞர்கள்...எல்லா துறைகளிலும் கால் வைத்துக்கொண்டு ஆனால் இறுதியில் என்ன தான் முழுதாக தெரியும் என்றால் சூன்யம் தான் விடையாக நிற்கிறது.
என்னப்பா பண்ற.... சார் ரியல் எஸ்டேட் பண்றேன் அப்புறம் பைனான்ஸ் நடத்துறேன்... சின்னதாய் துணிக்கடையில் ஷேர் பார்ட்னராக இருக்கிறேன்..

“ஆமா நீ ட்ரிபில் ஈ இல்ல படிச்ச “ஆமாம் சார் கொஞ்சநாள் கம்பெனியில வேலை பார்த்தேன் அது நமக்கு செட் ஆகல.....
புரியாத விடை....அதுநமக்கு செட் ஆகல. இக்கால இளைஞர்கள் அநேகம்பேர் உச்சரிக்கும் ஆச்சரியச்சொல். அப்புறம் சில வருடங்கள் கழித்து.....
“என்னப்பா ஆளையே பாக்க முடியல

“இங்க எதுவும் செட் ஆகல..ரியல் எஸ்டேட் படுத்துடிச்சி.... துணிக்கடை பார்ட்னர்ல பிரச்சனை, பைனான்ஸ்ல நஷ்டம்....அதனால வெளி நாட்டுக்கு போனேன்...அங்கயும் ஒன்னும் செட் ஆகல அதான் ஒருவருஷத்துல திரும்பி வந்துட்டேன்இப்படி பல துறைகளில் கால் வைத்து படித்ததும் மறந்துப்போய் பாவம் சும்மா சுற்றிக்கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். இதற்கிடையில் திருமணமாகி குழந்தை. மாமனார் வீட்டில் கொஞ்சம் வசதி அதானால வண்டி எப்படியோ ஓடிகிட்டு இருக்கு.
இப்ப ஒரு கார் வாங்கி டிராவல்ஸ் ல அப்படி இப்படி ஓடிகிட்டு இருக்கு.
“அது எப்படி போகுது?
“எங்க சார் வீட்டுக்குவீடு கார் ஆயிடுச்சு ஏதோ பேருக்கு ஓடிகிட்டு இருக்கு
எல்லா துறைகளிலும் கால் வைத்துப்பார்த்து விட்டு இப்பொழுது எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றிலுமே முழுதாய் தாக்குபிடிக்க முடியவில்லை என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
............................................................................................................................................................
படிப்பு ஏறவில்லை..எட்டாவது தான். ஆனால் எப்படியோ அப்பவே  கார் டிரைவிங் லைசென்ஸ் வாங்கியாச்சு.. சில கம்பெனிகளில் ஓட்டுனர் வேலை...
இப்படி போய் கொண்டிருந்த வாழ்க்கையில் நண்பர்கள் உதவியுடன் டூவீலர் விற்றல் வாங்கல் செய்து அது கொஞ்சம் பிக்கப் ஆக டிரைவர் வேலையைவிட்டு முழுதாய் அவற்றில் இறங்கி மெக்கானிசம் கற்று இன்று பல லட்ச ரூபாயில் வீடு இருக்கு சொந்தமா காரு இருக்கு....அப்புறம் என்ன சார் கொஞ்சம் நல்லாய் இருக்கேன்.... நல்ல லாபம் சார் பழைய கார்கள் டூவீலர் வாங்கி அதை ரெடி பண்ணி விற்றால் போதும் தேவையான வருமானம் கிடைக்கிறது.
ஒரே துறையில்.....
  
 அவர் படிக்கவில்லை என்றாலும் படித்த இளைஞர்களை விட சராசரி வருமான உயரத்திற்கு சற்று மேலே இருக்கிறார்.அன்மையில் அவர் ஃபேஸ் புக் அப்டேட் 'may i new baike' என்று  புல்லட் வண்டியில் அமர்ந்து பந்தாவாக போஸ் கொடுக்கிறார்.
 
 ..............................................................................................................................................
நம்மில் பலருக்கும் கூட சற்று எல்லா துறைகளிலும் பரிட்சயம் உண்டு. எனக்கும் ஆனால் இப்பொழுது இதைஎழுதிக்கொண்டு என்னை எண்ணிப்பார்க்கையில் நான் ஞான சூன்யம் தான். ஏதேனும் ஒன்றில் தனித்திறமை உண்டா என்றால் பெரிய முட்டைதான் விடை.

ஆக அன்பான பெருமக்களே ஏதேனும் ஒன்றிலேனும் தனித்திறமையுடன் விளங்குங்கள் உங்கள் பிள்ளைகளை விளங்கச்செய்யுங்கள் வெற்றி நிச்சயம் உங்கள் வாசல் தேடி வரும் என்பதில் ஐயமில்லை. 
                                 
  You're the architect of your life.

ஒரு நண்பரின் கதை...  இண்டர்வியூ வைக்க நேர்ந்ததாம்..அப்ப ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்ததாம். நீங்க படிச்சிட்டு ரெண்டு வருஷமா என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று இவர் கேட்க வேலை தேடிக்கொண்டு இருந்தேன் என்று பதில் அளித்து இருக்கிறார். அந்த இரண்டு வருடங்களுக்குள் அந்த துறை அபாரமாற்றம் கண்டு இவர் படித்தது ஓல்ட்டாகிப்போக ஏன் மேலே கோர்ஸ் பண்ணிக்கொண்டே தேடவேண்டியது தானே என்று உங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியாது என்று வருத்தத்துடன்  ரிஜக்ட் செய்திருக்கிறார். ஆக அப்டேட் ஆக இருப்பது கணினி துறையில் மிக்க அவசியம் என்பது புரிகிறது...இது ஏறக்குறைய எல்லா துறைகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இனிமேலும் நுனிப்புல் மேயாத மாடுகளாய் நாம் இருப்போமாக...ஆமென்.

9 கருத்துகள்:

  1. கண்டிப்பாக எல்லா துறைகளுக்கும் பொருந்தும்... நாம் முடிந்தளவு (குழந்தைகளுக்காவது) அப்டேட் ஆவது மிகவும் முக்கியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் பல.

      நீக்கு
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  3. நுனிப்புல் மேயுற மாடு அறிவுள்ள மாடு ,வேரோடு இன்றே தின்று விட்டால் நாளைக்கு ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்து கொண்டுள்ளதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசி அடங்களையே ! ஆர அமர சாப்பிட்டால் நிம்மதியாக பசி அடங்கும்.

      நீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. இதைதான் அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்ததுன்னு சொன்னாங்க (நான் சரியா சொன்னேனா?)

    பதிலளிநீக்கு
  6. கண்டிப்பாக உண்மை தாங்க. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!