சனி, ஏப்ரல் 26, 2014

செய்வீர்களா? செய்வீர்களா?“எங்க போகலாம்மா ?

“எல்லா இடத்துக்கும் தான் போயாச்சு....ராமசாமிகிட்ட தான் போகல

“அங்கியாயாயாயா...............சரி போகலாம்
“ஏம்மா வாத்தியார் வந்திருக்காரு உட்காரச்சொல்லு.எப்படிமா இருக்கீங்க, சார், அம்மா தான் சார் முக்கியம்; காசு பணம் இல்ல; காசு வரும் போகும்,அப்புறம் வீடு கட்டிட்டீங்களா? அம்மாவ கூடவே வைச்சிருங்க. எங்க அம்மா கடைசி வரைக்கும் என் கூடவே தான் இருந்தாங்க....இவங்கள வேணும்னா
கேட்டுப்பாருங்க...ஏம்மா சொல்லும்மா...ஆமாம் சார் இவங்க கூட முப்பது வருஷமா இங்க தான் வேலை செய்றாங்க..உங்க ஊரு பொண்ணு மேரி இப்ப தான் கிளம்பிப்போச்சு..இங்க தான் வேலை செய்யுது...தெரியும் சார்அத 5 மணிக்கெல்லம் வீட்டுக்கு அனுப்பிடுவேன்....பெரிய பையன் பாண்டியில வாசன் கண் ஆஸ்பத்திரியில இருக்கான்..அம்மா “திருச்சியில தானே இருந்தாங்க?..... “இல்லமா அங்க படிச்சான் மருமக பாண்டி காலாப்பட்டு ஆஸ்பத்திரியில மயக்க மருந்து டாக்டர்...அவங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பாண்டி குளுனி கான்வென்டில் தான் மருமக படிச்சா பையனையும் அங்கேயே சேத்துட்டாங்க..சின்ன பையனுக்குத்தான் பொண்ணு பார்த்துட்டு இருக்கேன்.அவனும் பிம்ஸ் ஆஸ்பிட்டல் ல தான் எம்டி க்கு படிக்கிறான்..நீங்க ஏன் வெள்ளிக்கிழமை வந்தீங்க? நான் இருக்க மாட்டேன் நேத்து தான் கலெக்டர் போன் பண்ணி இன்னைக்கு வரவேண்டாம்.. நாளைக்கு வாங்கனு சொல்லிட்டார் அதான் இன்னைக்கு இருக்கேன். அப்புறம் சொல்லுங்கம்மா என்ன பண்ணுது....

மூணு ஊசி, முந்நூற்று ஐம்பது ரூபாய்க்கு மருந்து பீஸ் 100 ரூபா சார் விலைவாசி எல்லாம் கண்டபடி ஏறிடுச்சி இந்த மருந்த பாருங்க ஒரு மாத்திரை 10ரூபா... 15 மாத்திரை வாங்கிக்கோங்க...நீங்க ஏம்மா கவலைப்படறீங்க வாத்தியார் வாங்கி கொடுப்பார்... சார் இத ஸ்கூல்ல டேப் போட்டு ஒட்டுங்க...ஆரஞ்சு பழத்தின் பயன்களைப்பத்தி இருக்கு மடிக்காதீங்க சார்.....பாலமுருகன் எங்க அக்கா பையன் தான் எங்க குடும்பத்துல மொத்தம் 17 டாக்டர்...கிராமத்து வீட்ட அண்ணங்கிட்டயே கொடுத்திட்டேன்....அவங்க பையன் இப்ப லண்டன்ல இருக்கான்....கம்பியூட்டர் இஞ்ஜினியர்....
 டாக்டர் திரு கே. இராமசாமி.

இவருக்கும் எங்களுக்குமான உரையாடல் தான் மேலே உள்ளது. நீளம் கருதி முக்கால்வாசி கட் செய்யப்பட்டது.அந்தக்காலத்து பேமஸ் டாக்டர். எப்பொழுதும் ஆளை பார்த்துவிட்டால் போதும் விடமாட்டார் மனுஷர்.அவர் பேச்சுக்கு பயந்தே இப்பொழுதெல்லாம் அங்கே செல்வதில்லை, ஆனால் இன்று அம்மா அங்கே போகலாம்  என்றதால் ....மேற்படி.....அமைந்த உரையாடல்

நோய்களைச்சொன்னதும்  .....இவங்க ரொம்ப வேண்டப்பட்டவங்க நானே ஊசி போடுறேன் நீ போயி எடுத்துனு வா, இந்தாங்க சார் ஒரு ஐம்பது ரூபா கொடுத்தனுப்புங்க...ஒரு இருவது ரூபா கொடுங்க சார் இது நான் எழுதின புத்தகம் முதலுதவி பத்தி எழுதி இருக்கேன்  ஸ்கூல்ல சொல்லி கொடுங்க....

பேமிலி டாக்டர்னு சொல்றது இவரமாதிரி ஆளுங்களை தானோ ?

வீட்டுக்கு வந்தால் இப்ப கால் வலி ரொம்ப பரவாயில்ல..... நல்லா இருக்கு இப்படியே இருந்துட்டா போதும் என்கிறார்கள்.

ஓ இது தான் கைராசி டாக்டரோ?.

இப்படி பேச இப்பொழுது எந்த டாக்டருக்கும் நேரம் இல்லை.
 பணம் பணம் பணம்.
..................................................................................................................................................................
செய்வீர்களா? செய்வீர்களா?

இப்ப தமிழ்நாட்டுல ரொம்ப பேமசான டயலாக் இதுதான். ‘செய்தீர்களா? செய்தீர்களா? என்பது எதிர்கட்சி டயலாக். என்ன புரியுதுங்களா????....
அரசியலைவிடுங்க.

மருத்துவத்துறை

நமக்கு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் வந்துக்கொண்டிருக்கின்றன. (வயசு ஆகுது இல்லையா?)
‘பிகரு இல்லாத காலேஜும் சுகரு இல்லாத உடம்பும் இருந்ததா சரித்திரமே இல்ல என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் எல்லா நோயும் வந்துக்கொண்டே இருக்கிறது.

இப்படி இருக்க... மருத்துவமனைகளின் தரம் எப்படி உள்ளது இந்திய கிராமங்களிலும்...நகர்புறங்களிலும் என்பது தான் சற்று யோசிக்க வேண்டியுள்ளது.


 • நோயாளிகள் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் டிவியில் நாடகங்களை சத்தமா வைத்துக்கொண்டு செவிலியர்கள்.... இதனைவிடுத்து நோய்கள் வரும் காரணங்கள்.... வந்தபின் செய்ய வேண்டியவை..... வரும்முன் காப்பது போன்ற பயனுள்ள  சிடிக்களை ஒளி பரப்பலாம்...

 • மருந்தகத்தில் ஒரே கூட்டம் பார்த்தால் ஒருவர்தான் மருந்து வாங்குகிறார் மற்றவர்கள் எல்லாம் சும்மா கூட வந்தவர்கள். மருந்து வாங்குபவரை தவிர்த்து மற்றவர்கள் வெயிட்டிங் ஹாலில் உட்கார்ந்து இருக்கலாமே....

 • மருத்துவமனைகளில் சுத்தமான குடிநீர் வசதி அமைக்கலாம்.

இப்படி சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் செல்லலாம் இந்திய சில மருத்துவமனைகளை நோக்கி.
மக்களையும் மருத்துவமனைகளையும் நோக்கி நாம் கேட்க வேண்டியது ஒன்று தான்..மேற்படி. செய்வீர்களா? செய்வீர்களா?

ஞாபகம் வருதே !

டாக்டர் திரு நாகராஜன்.

1980 களில் ஊர் ஊராக சென்று வைத்தியம் பார்த்த ஹோமியோபதி டாக்டர்.
என்னிடம் இவர்பட்டபாடு இருக்கிறதே.
வீட்டிற்கே வந்துவிடுவார்... சொல்லப்படும் அனைத்து நோய்களுக்கும் கடுகு போன்ற சிறிய சிறிய...கலர்கலரான மிட்டாய் மாத்திரைகள். (சாப்பிடவே இனிப்பாக இருக்கும் அதனால் அதற்குப்பெயர் மிட்டாய் மாத்திரை.)  எல்லாம் ஓகே தான். ஆனால் ஊசி போட மட்டும் நோ. நான் ஓட அவரும் உறவினர்களும் சேர்ந்து என்னை துரத்திப்பிடித்து... ஊசிப்போட்டால்..... நான் திட்டிய திட்டுகள்... சொல்லி சிரிப்பார்கள் அண்ணன், மாமன்மார்கள்...

இப்பொழுது நினைத்தால் வெட்கமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது

இன்றும் நலமாக இருக்கிறார்...எப்பொழுதாவது வழியில் பார்ப்பேன்.மனதிற்குள் நன்றி சொல்லிக்கொள்வேன் ஏன்னா அவங்க தானே நம்மை காப்பாற்றி விட்டவர்கள்.அறிமுகம் செய்ய சற்று கூச்சமாக இருக்கிறது. அவரை எனக்குத்தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாது....இல்லையா? நம்மள மாதிரி எத்தனைப்பேரை பார்த்திருப்பார்?

கொஞ்சம் நினைத்துப்பாருங்கள், நிறைய நன்றி சொல்லுங்கள் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் மருந்துகளுக்காகவும் மருத்துவர்களுக்காகவும்.

6 கருத்துகள்:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 2. சில மருத்துவ தெய்வங்கள் இன்றைக்கும் உள்ளார்கள்...

  பதிலளிநீக்கு
 3. #சிறிய சிறிய...கலர்கலரான மிட்டாய் மாத்திரைகள்#
  அதென்ன அரிசி மிட்டாயா ?ஹோமியோபதி மாத்திரைகள் வெள்ளை நிறம் மட்டும்தான் !
  த ம 3

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!