சனி, மார்ச் 29, 2014

cut ,copy, paste.



மனோபாலாவிடம் ஒரு சின்ன பேட்டி:
“ஆமா எனக்கு டெக்னிக் பத்தி ஒன்னும் தெரியாத டம்மி பீஸ் னு எப்படி கண்டுபிடிச்சீங்க

மனோபாலா: “ஆமாய்யா எல்லாரும் டெக்னிக் க பயங்கரமா எழுதுராங்க நீ மட்டும் தான் பயங்கரமா டெக்னிக் இல்லாமலே டெக்னிக் பத்தி   எழுதுர.
ஹிஹி மீதிய அப்புறம் தொடரலாம் சார் கொஞ்சம் போயிட்டு வாங்க.

மத்தவங்க எதாவது சொல்லிட்டுப்போகட்டும் சார் நம்ம ஜோலிய நாம பாப்போம். அதாவது இன்னைக்கு கட் காப்பி பேஸ்ட் பத்தியும், கண்ட்ரோல்+ ஆல்ட்+ டெலீட் பற்றியும்  உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத புது முறைகளைப்பற்றி சொல்லிக்கொடுக்கப்போறேன். நீங்க எல்லாரும் நல்லா படிச்சவங்க கொஞ்சம் ஈஸியா புரிஞ்சிக்குவீங்க அப்படினு நான் நம்பறேன். இந்த பதிவு பயனுள்ளதா இருந்தா உங்க நண்பர்களுக்கு கண்டிப்பா ரெக்கமெண்ட் பண்ணுங்க.சமூக வலைதளங்களில் பகிர்ந்துக்கோங்க...முடிஞ்சா  காப்பி பேஸ்ட் போட்டுக்கோங்க ... நீங்கள்ளாம் கம்பியூட்டர் வச்சினுகீறீங்க பெரியா ஆளுங்க.
ஏன்னா கட், காப்பி, பேஸ்ட், எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியாததா என்ன....?

முதல்ல..................

கட்

               மா எனக்கொரு டவுட்டு கம்பியூட்டர் எப்படி கத்தரிக்கோல வச்சி கட் பண்ணுது அதுக்குள்ள யாராவது டெய்லர சம்பளத்து வச்சி இருப்பாங்களோ?...அப்படியே இருந்தாலும் எல்லாத்தையும் எப்புடி
கத்தரிக்கோலாலேயே கட் பண்ணமுடியும்...உதாரணத்திற்கு பேப்பர் துணி இதுமாதிரி பொருளை கத்தரிக்கோலாலேயே கட் பண்ணலாம்..ஆனா மரம், கம்பிங்க...போன்றதையெல்லாம்......... எப்படிங்க பாஸ்..... கொஞ்சம் லாஜிக் இடிக்குது.
சந்தேகத்த விடுங்க....
முதல்ல எதை கட் பண்ணப்போறோமோ அதை மனசுல வச்சிக்கினு அப்புறம் எது தேவை எது தேவையில்லனு நீங்க தான் முடிவுபண்ணனும்.
ஏன்னா நீங்க தான் வெட்டப்போறீங்க.

கத்தி:- சிறிய பொருட்களை ‘கட்பண்ண சின்ன கத்தியே போதும்.

கோடாரி:- மரங்களை ‘கட் பண்ண யூஸ்பண்ணுங்க.

கத்தரிக்கோல்:- துணி பேப்பர் ‘கட்பண்ண கத்தரிக்கோல் யூஸ் பண்ணுங்க.

பிளேடு:-நகம் பென்சில் போன்றவற்றை ‘கட் பண்ண.

இதுபோன்ற பல ‘கட் டிங்கு முறைகள் இருக்கு; உங்களுக்கு எது சாத்தியமோ அவசியமோ அதை தேர்ந்தெடுப்பது உங்கள் புத்திசாலித்தனமாகும் என்பதை மிக பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.   

வேண்டுமானால் படங்களைப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


வெட்டுஒண்ணு  துண்டுரெண்டு.
அதாவது தெளிவா சொல்றேன் ‘ஏக் மாத் தோ துக்கடாஇப்ப புரிஞ்சு இருக்குமே. புரியும்படி சொன்னாதான் நிறைய பேருக்கு புரியும். அதே தாங்க நாம வெட்டறது இப்படி இருக்கணும். 

ஒரு சின்ன கட்டிங்: “நீங்க கேக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க.... எனக்கு ‘கட்டிங் பண்ணா என் பையனுக்கு இலவசமா கட்டிங் பண்ணுவியானு கேக்கிறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா?

நிஜமாவே நீங்க கட் பண்ண வேண்டியவை இவை தாங்க:-

தீய நட்பு
கெட்ட பழக்க வழக்கங்கள்
சோம்பல்
கஞ்சத்தனம்
பொறாமை
கவலை
தாழ்வு மனப்பான்மை...இன்னும்பிற...............

அடுத்தது......


காப்பி:- 


             காபியில நிறைய வெரைட்டி இருக்குங்க. எனக்கு பிடிச்சது சன்ரைஸ் உங்களுக்கு எது தேவையோ நரசுஸ்,புரு....இப்படி கூகுல்ல தேடியாவது காப்பி அடிச்சி வீட்டுல போட்டு கொடுக்க சொல்லுங்க.

அவங்க போட மறுத்தா பின்வரும் சூப்பர் டிப்ஸ் களை பாலோபண்ணுங்க.


  1. ஹாய் நீ காப்பி போடுறது சாட்சாத் எங்க அம்மா போடுற மாதிரியே இருக்கு. 
  2. நேத்து எங்க தம்பி வீட்டுல காப்பி குடிச்சேன் காப்பியா அது கஷாயம்..... யப்பா சாமி...இனிமே நான் அங்க குடிப்பேன்னு நினைக்குற.தம்பி மாமனார் என்ன நாட்டுவைத்தியரோ.... 
  3. உன்னைப்போல யாருக்குமே காப்பி போட வராது.
  4.  உங்க அம்மாவ விட நீ தான்  சூப்பரா காப்பி     போடுற.                                                                     
  5. .....................
  6. .......................
  7.  .............
  8. இப்படி சொந்த ஐடியா ஏதாவது இருந்தாலும் டிரைப்பண்ணுங்க அவிங்க இண்டர்நெட், டிவி ய விட்டு எழுந்திரிக்கலனா இருக்கவே இருக்கு வேற ஒரு ஐடியா

               நாமே போட்டுக்கிறது தான்.  வேற வழி. 


காப்பி:- வாழ்க்கையில நிறைய விஷயங்கள்  அடுத்தவங்க கிட்ட இருந்து நாம காப்பி பண்ண வேண்டி இருக்கு....
அன்பு
நட்பு
நல்ல நடத்தைகள்
நேர்மை
சுறுசுறுப்பு......
தன்னம்பிக்கை.....................
 இன்னும்பிற..............
இப்படி காப்பி பண்ணுங்களேன்....

பேஸ்ட்:-

                அந்த காலத்துல பேஸ்டுனா என்னனு கேப்பாங்க. அடுப்புக்கரி, சாம்பல், செங்கல் தூள்..கோபால் பல்பொடி .....இதுதானுங்க பேஸ்ட்...இப்ப அப்படியா...
கோல்கேட்.... பெப்சோடண்ட்...குளோசப்...இப்படி ஒரு ஊருபட்ட கம்பெனி இருக்குங்க.... இது உங்கள் சாய்ஸ்............ பாக்கணும்னா இங்க போங்க.




பேஸ்ட்:-மேலே சொன்ன ‘காப்பி பண்ண
நட்பு
நல்ல நடத்தைகள்
நேர்மை
சுறுசுறுப்பு......
நல்ல விஷயங்களை பேஸ்ட் பண்ணுங்க.... அப்புறம் என்ன வாழ்கையே சூப்பர் தானூங்க.

எப்புடி நம்ம கட் காப்பி பேஸ்ட் ?
.............................................................................................

கண்ட்ரோல்+ஆல்ட்+டெலீட்= டாஸ்க் மேனேஜர்

மனம்+உடல்+அறிவு= மனசாட்சி

மனசாட்சியை நல்லா கவனிச்சீங்கனா எது எது தேவையில்லாமல்(கெட்ட பழக்கங்கள்) இயங்கிகிட்டு இருக்கு எது எது தேவையான புரோகிராம் (நம்ம கிட்ட இருக்கிற நல்லகுணம்) என்பது தன்னாலயே தெரிஞ்சிடும் இல்லையா?
கெட்ட்தை குளோஸ் பண்ணுங்க....நல்லதை தொடர்ந்து செயற்படுத்துங்க....
இதுதானுங்க... உங்க மனம் சொல்றத கேளுங்க+உடல் நலம் பேணுங்க+அறிவை பயன்படுத்தி முன்னேருங்க= மனசாட்சிப்படி......வாழ்ந்தா....

வாழ்க்கை என்னைக்கும் வசந்தம் தானுங்களே?
என்னங்க நான் சொல்றது?....


பின்குறிப்பு- இது கம்பியூட்டர் சம்பந்தமான கட், காப்பி, பேஸ்ட்..... அல்ல என்பது முன்கூட்டியே தெரிவிக்காமைக்கு வருந்துகிறோம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!