சனி, மார்ச் 08, 2014

அரிதாரம்



  kingrajasc@gmail.com

ஆதவன் எழும்முன்னே தாம் எழுந்து
ஆற்றி பல காரியங்கள் அனைவருக்காய்
அவள் ஒரு இல்லத்தரசியாய்...



காலை மதியம் இரவு மற்றும் சாயுங்காலம்
சமையல் எல்லாம் முடித்து
அவள் ஒரு சமையல்காரியாய்...


கோலம் போட்டு பாத்திரம் துலக்கி
துணிமணி துவைத்து துப்புரவாக்கி
அவள் ஒரு வேலைக்காரியாய்...


அடித்து பிடித்து அவசரமாய் பயணம்செய்து
அலுவலகம் அடைந்து முந்தானையில் முகம்துடைத்து
அலுவலகத்தில் பணியாளராய்...



பெற்றோருக்கு அவள் மகளாய்- தன்
பிள்ளைகளுக்குத் தாயாய்
கணவருக்கு துணைவியாய்
மாமியாருக்கு மருமகளாய்
நட்புகளுக்கு நண்பியாய்
பன்முகம் காட்டும் சுயஅடையாளமாய்
சில நேரங்களில்  சமூகத்திற்காய்,,,,,,,,,,,


 ஒரே நாளில்..
இன்னும் இன்னும்
எத்தனை  எத்தனை
அரிதாரம் பூச வேண்டியுள்ளது.....
பெண்ணினம்.


நாளும் நமக்காய் உழைக்கும்
நம்மை சுற்றும் கோள்களாய்
தாயாய் துணைவியாய்
மகளாய் மருமகளாய்
உடன்பிறப்புக்களாய் உற்றத்தாராய்.........


தியாகத்தின் திருவுருவமாய்

பொன்னிணும் மேலான
பெண்மையை போற்றுவோம்.!


 kingrajasc@gmail.com





  

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!