வெள்ளி, மார்ச் 07, 2014

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.........(பாகம்1)

உங்களுக்கு நினைவிருக்கிறதா ?...


நான் முதலமைச்சர் ஆனால்;....அல்லது, நான் பிரதமரானால்.....
கட்டுரை எழுதுக.


நமது பள்ளி பருவத்தில்.............  படிக்கும் பொழுது இப்படி தமிழ் பாடத்தில் கட்டுரை எழுதச்சொல்லி கேட்பது வழக்கம்.
நமது கற்பனைகள் விரிந்து  நாம் எதிர்பார்க்கும் நிகழ்வுகளை கட்டுரையாக எழுதுவது வழக்கம்.


இன்று...
 இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டுக்கான தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் அடிப்படைக்கட்சி உறுப்பினர்கள் வரை அலசிஆராயும் கருத்துக்கள் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதே.

ராகுலா? மோடியா ?.
தமிழகத்தில் யார் யாருடன் கூட்டணி ?

ஏன் இந்த எதிர்பார்ப்பு?.
இது நமக்கு மட்டுமா?
இல்லை.
 உலக நாடுகளின் அனைத்தின் பார்வையும் இந்தியாவின் மீது குவிந்தவண்ணம் இருக்கிறது. BP ஏறுவதுபோல இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்னாகும் என்பதுபோல எகிறிக்கொண்டிருக்கிறது அனைவரின் எதிர்பார்ப்பும்.

இந்தியர்கள் சாமானியர்கள் அல்ல. என்பது உலகமே ஒப்புக்கொள்ளும் செய்தி. 

சிறந்த உதாரணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்றைய மேலாண்மை நிர்வாகம்.

யாருக்குத்தான் கடன் இல்லை. யாருக்குத்தான் தொல்லை இல்லை.

உலகில் முதல் பணக்காரர் ஆகட்டும் கடைசி ஏழையாகட்டும் யாராவது நிம்மதியுடன் இருக்கின்றனரா கையை தூக்குக்குங்கள் என்றால் ......பூச்சியம் தான் விடையாக கிடைக்கும்.

எல்லோருக்கும் பிரச்சனை உண்டு என்பது மட்டும் மறுக்க முடியாத உலகியல் உண்மை. அவரவர் வசதிவாய்ப்புகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரச்சனைகள் சின்னதோ ? பெரியதோ ?  கண்டிப்பாக உண்டு.


சிக்கல்கள் இன்றி யாருடைய வாழ்க்கையும் இல்லை.
யாருமே இல்லை...என்பது மட்டும் அனைவரும் அறிந்த உண்மை.


‘உங்கள் நெஞ்சில் கை வைத்துச்சொல்லுங்கள் என கிராமங்களில் கேட்பதைப்போன்று கேட்டால்....
ஒபாமாவா ஆகட்டும் ஓ.பன்னீர் செல்வமாகட்டும்; இல்லை என்பதே சரியான விடை; மாற்றிச்சொன்னால் பொய்யர்கள்.
ஏன், நீங்களே பதில் சொல்லிப்பாருங்களேன்?.      
அது அமெரிக்காவாழ்விலிகளாகட்டும்  இந்திய வாழ்விலிகளாகட்டும்.


இந்திய பொருளாதாரம் அசைக்க முடியாதது. ஒவ்வொரு கிராம பெண்களிடமும் அசையும் சொத்துக்களாக பத்து பதினைந்து பவுன் தங்க நகைகள் உண்டு. மக்கள் தொகையில் முதல் இடம் நோக்கி அதிவேக பயணம் செய்யும் இலக்கைக்கொண்டு கணக்குப்போட்டுப்பாருங்கள் இந்தியாவின் கையிருப்பை.
இந்தியாவில் உலகில் உள்ள பணத்தில் பாதி கண்ணுக்குத்தெரியாமல் ஒளிந்துக்கிடக்கிறது.பொருளாதாரத்தில் ஆனானப்பட்ட அமெரிக்காவே தடுமாறியப்பொழுது............. இந்தியா அசரவில்லையே.


உலக மக்கள் தொகையில் முதலிடம் நோக்கி......
பொருளாதாரத்தில் வலுவான இலக்கை நோக்கி......
கணினித்துறையில் திடம்பெற்று வல்லமை நோக்கி......
உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி.....


இப்படியெல்லாம் சீரியசாக கட்டுரை எழுதவோ ஆராட்சி செய்யவோ நமக்குத்தெரியாதுங்க....ஐயாம் வெரி சாரி. நம்மைப்பற்றித்தான் உங்களுக்குத்தெரியும் இல்ல.
ஆகவே...
அரசியல்வியாதிகள்  சாரி,

அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள் தான் இந்தியாவின் ஊழலுக்கு அடுத்த உலக பிரசித்தம்.


இந்தியாவைப்போல் முக்கியமாக தமிழகம்போல் வேறு எந்த நாட்டிலாவது இப்படி இலவசங்கள் கொடுப்பதாக தேர்தலில் அறிவிக்கிறார்களா இல்லை அறிவித்தபடியே  கொடுத்தார்களா என்பதை தயவுச்செய்து தெரிவிக்கும்படி அன்னிய தேசத்தில் வசிக்கும் என் இனிய தமிழ்மக்களே ! உங்கள் பாசத்துக்குறிய பாரதிராஜா மன்னிக்கவும் கிங்ராஜா கேட்கிறேன்.

நடந்துமுடிந்த தமிழக தேர்தலுக்குப்பின் தமிழக மக்கள் பெற்ற இலவசங்கள் பின்வருமாறு.

பசு மாடு-1 கன்றுக்குட்டி இணைப்புடன்.
ஆடுகள்-4
மிக்சி -1
கிரைண்டர்-1
டேபிள் ஃபேன் -1
மாணவர்களுக்கு மடிக்கணினி-1
சென்ற ஆட்சியில் வழங்கப்பட்ட
கலர் டிவி-1
சமையல் எரிவாயு அடுப்பு-1
இலவச அரிசி மாதந்தோரும் -20 கிலோகிராம்.

இப்படி பல்வேறு நலதிட்டங்களைப்பெற்று நிம்மதியுடன் வாழ்கிறோம். நீங்க எப்படி? (ஆமா, மிஸ்டர்ஒபாமாவுக்கு ஏன் ஓட்டுப்போட்டீங்க அவர் என்னகொடுத்தார் ஓப்பனா எங்கிட்ட மட்டும் இரகசியமா சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.)
உங்களுக்கு ஒன்று தெரியுமா? ரகசியம் தான் உலகில் அதிகம் பேரால் அதிகமாக பேசப்படும் விஷயம். ஓகே அந்த அமரிக்க சிதம்பர ரகசியத்தை வெற்றி ரகசியத்தை சொன்னால் நமக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தேன்.
இப்ப நம்ம கட்சி வேட்பாளர் பின்வருமாறு பிரச்சாரம் செய்கின்றார்  முடிஞ்சா ஓட்டுப்போட்டு ஜெயிக்க வையிங்க.

 நம்ம கட்சி வேட்பாளருக்கு டெப்பாசிட் நீங்க தான் கட்டணும் ஆமா கண்டிப்பா சொல்லிப்புட்டேன்.


நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.........யப்பா சாமி ..........இப்ப தாங்க நாம மேட்டருக்கே வர்றோம்
இப்படி பேச ஆரம்பித்து வாயில் வந்த பொய்யெல்லாம் சொல்லப்படுகிறது.
மணலை கயிறாய் திரிப்பேன் இந்த கதை தெரியுமா உங்களுக்கு?.....முடியாததை செய்யச்சொல்லும் சாகசக்கதை நேரம்கிடைக்குபோது அப்புறம் சொல்கிறேன்.

இப்ப மேட்டர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....

ஆம் ஆத்மி போல பயந்து ஓடமாட்டோம்.
நம்பி ஓட்டுப்போட்ட மக்களை நடுத்தெருவுல வுட்டுபுட்டு கவர்னர் ஆட்சிக்கு வழிபண்ணா எவன் திரும்ப ஓட்டுப்போடுவான்


பண்ட மாற்றுமுறை திட்டம்.அல்லது
தண்ணீருக்கு எண்ணெய் திட்டம்.

இமயமலைத்தண்ணீரை எல்லாம் திசைதிருப்பி குழாய் வழியே அரபு நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து கச்சா எண்ணெய் குழாய் வழியே பெறுவோம். குழாயில் ஓட்டைப்போட்டு ஆட்டைப்போடும் அண்டை நாடுகளுடன் கும்மாங்குத்துப்போர் தொடுக்கப்படும்.


ஃபுல்லைக்கேட்டு பட்டினிப்போராட்டம்.

உலக குடிகாரர்களை ஏமாற்றும் உலக மகா அய்யோக்கிய மெட்ரிக் அளவுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்படும்.
பின்ன என்னங்க குவாட்டர்னா 250 மில்லி இருக்கனும் இவிங்க 180 மில்லியை குவாட்டர்னு சொல்றாங்க. ஆஃப் னா 500 மில்லி; ஃபுல்லுனா 1000மில்லி அதாவது ஒருலிட்டர். இந்த கணக்கு கூட நமக்குத்தெரியாதா? என்னதான் குடிகாரனா இருந்தாலும் இப்படியா குடிகாரர்களை வயிற்றில் அடித்து ஏமாற்றுவது.

ரேஷன் கடையிலேயே மதுபாட்டில்கள் அல்லது நடமாடும் டாஸ்மாக்.

விபத்துக்கள் அதிகம் நடைபெற காரணமாக அமைவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான். ஏன் 3 அல்லது 4 ஊர்களுக்கு ஒரு டாஸ்மாக்.அதனால தானே வண்டி எடுத்துக்கொண்டு அங்கு போகிறார்கள். அதனால உள்ளூரிலேயே  கிடைக்கும்படி செய்து விட்டால்.....அதுவும் வாகனங்களில் வருபவருக்கு கிடையாது என்ற அறிவிப்புடன் விற்பனை செய்து வாகன விபத்துக்களை  தடுக்க இப்படி நிறய ஐடியா இருக்கு.அல்லது நடமாடும் டாஸ்மாக் அமைக்கலாமா என்ற ஆலோசனை அமைச்சரவையில் கூடி விவாதிக்கப்படும்.நீங்க ஒரு போன் பண்ணா போதும் வீடு தேடி வந்து கொடுக்கப்படும். அட ஆம்புலன்ஸ் ஃபையர் எஞ்சின் எல்லாம் வரதில்லையா? அதுமாதிரி.


 ஒரு நாள் மந்திரி பதவி:

கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒருநாள் மந்திரி பதவி சுழற்சிமுறையில் வழங்கப்படும். அட எல்லோருக்கும் ஆசை இருக்கும் இல்லையா?


நினைவு தினம் :-
வீரப்பன், ஒசாமா போன்றவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படும். அட அப்பதான்யா தீவிரவாதிகளுக்கு பயம் வரும்.

வட்டமேசை மாநாடு :-
அட எத்தனை வருஷமாதான் வட்டமேசை மாநாடு நடத்துவது.... ஒரு சேஞ்சுக்கு இனி வருங்காலங்களில் சதுரமேசை மாநாடு செவ்வகமேசை மாநாடு  கூம்புமேசை மாநாடு எல்லாம் நடத்தப்படும். இதேபோன்று G8 மாநாட்டை G9…. G10…என மாற்றி நடத்துவோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதினை உலகிற்கு எடுத்துக்கூறுவோம்.ஊழல்:-
இந்த வார்த்தையை தடை செய்யப்பட்ட வார்த்தையாக அறிவிப்போம். இதை உச்சரிப்பவர்கள் மீது ‘தடா தடாலடியாகப்பாயும். (இப்ப எப்படி ஊழல் புகார் செய்யுறீங்கணு பாப்போம்.?)

இந்தியாவின் ஊழல் பற்றி பெரிய்ய்ய்யய....... புராணமே எழுதலாம். எல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை ஞாபகத்திற்காக.
ஒருமுறை இந்திய அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அமைச்சருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வெளிநாட்டு மந்திரி சொன்னார் “சார் அதோ தெரியுது பாருங்க பாலம் அந்த பாலத்தை நான் தான் டெண்டர் எடுத்து கட்டினேன். அதில் வந்த வருமானத்தை வைத்து தான் இந்த வீட்டை கட்டினேன்

“ஓ அப்படியா மகிழ்ச்சி.பாலமும் வீடும் அழகாக உள்ளது பாராட்டினார்.

பின்னர் ஒருமுறை அந்த வெளிநாட்டு அமைச்சர் இந்தியா வந்து அமைச்சரை சந்தித்தார்.
பில்கேட்ஸ் பங்களாவைவிட மிகப்பெரிய பங்களாவில் சந்திப்பு. பங்களாவின் அழகில் மயங்கியே போனார் அமைச்சர்.
எங்க நாட்டு பங்களாவைவிட மிக அழகாக கட்டியுள்ளார்கள் என பாராட்டினார்.
“இது யாருடையது?
“என் பங்களாதான் “
 “வாவ் வெரி நைஸ். எப்படி கட்டினீங்க?
“அதோ தெரியுது பாருங்க அந்த பாலத்தை நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த தொகையை கொண்டுதான் இதை கட்டினேன்
வெளி நாட்டு அமைச்சர்- “அங்க எந்த பாலமும் தெரியலையே?
நம்ம அமைச்சர் கூலாக பதில் சொன்னார்....
“நீங்க பாலத்தை கட்டிவிட்டுதான் அதில் வரும் வருமானத்தை எடுப்பீங்க....நாங்க பாலம் கட்டாமலே முழுசா சுட்டிடுவோம் இல்ல.....
(நம்பினால் நம்புங்கள் அப்படினு வாக்குறுதிகளை புத்தகமாக போட்டால் என்ன?.... எல்லோருக்கும் சிறந்த நகைச்சுவை புத்தகம் கிடைத்தமாதிரி இருக்கும்)
பதிவின் நீளம் கருதி......

பாகம்-2 விரைவில்....
எங்கள் வாக்குறுதிகள்
............தொடரும்.............


11 கருத்துகள்:

 1. தினம் தினம் நிலைமையை நினைத்து தான் சிரித்துக் கொண்டிருக்கிறோமே... புத்தகம் போட்டால் அறியாதவர்கள் சிரித்தாவது பயன்பெறுவார்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. ஆமாம் ஐயா. தங்களின் பார்வைக்கு நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வேட்புமனு தாக்கல் பண்ணி கொடுத்திட்டீங்க,நன்றி அண்ணார் அவர்களே !

   நீக்கு
 3. சரியான நேரத்தில் சரியான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துக்கள் எமக்கு பெருமை.நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் பொன்னான வாக்குகளை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. வாக்குறுதிகளை காபி ரைட் வாங்கிக் கொள்ளுங்கள் ,யாராவது இதையே சொல்லக்கூடும் !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ...ஹா... தங்களின் வருகைக்கு நன்றி ஐயா.

   யாராவது சொல்லிட்டுப்போகட்டும் விடுங்க.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!