திங்கள், மார்ச் 17, 2014

கால்ல அடிபட்டு இருக்கு அதான்.....“நம்ம தலைவர் அரசியலுக்கு புதுசுனு அப்பப்ப நிருபிச்சிடறார்”

“எப்படி எதை வச்சி சொல்ற”

“நம்ம உட்கட்சி 'பிளவை' சரி செய்ய நல்ல மேஸ்த்திரியா பாருங்கனு சொல்றாரு.
.............................................................................................................................

தலைவர் : “சே, கூட்டணி குறித்து நாம போட்ட கணக்கு தப்பா போயிடுச்சே”

தோழர் :- “ஆமாங்க தலைவரே! அதுக்குத்தான் நல்ல கணக்கு வாத்தியாரை எப்பவும் நம்ம கூடவே வச்சிருக்கனும்”
................................................................................................................................


நிருபர்:- " உங்க கூட்டணி பேச்சு வார்த்தை எப்படி நடக்குது?"தலைவர்:- "நல்லா நடக்குது நாளைக்கு முடிவு சொல்லிடுவோம்"


நிருபர்:-  "இல்ல, பேச்சுவார்த்தை நல்லா நடக்கலைனு கேள்விப்பட்டோம்"


தலைவர்:- (கடுப்பில்) ஆமாங்க, அதுக்கு கால்ல அடிபட்டிருக்கு அதனால நல்லா நடக்கல... அதுக்கு சரியானதும் நல்லா நடக்கும் போதுமா?
 ........................................................................................................................4 கருத்துகள்:

 1. நல்ல கணக்கு வாத்தியார் உட்பட அனைத்தும் கலகல...

  பதிலளிநீக்கு
 2. கிராக்கை சரிசெய்ய மேஸ்திரியை அழைக்கும் கிராக்கை இப்போதுதான் பார்க்கிறேன் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படித்தான் நம்ம அரசியல்வாதிகள் குழம்பிப்போய் இருக்கிறார்கள் அய்யா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!