05.03.2014 இன்று
உலகம் முழுவதும் சாம்பல் புதன்
என்று கிறிஸ்தவ அன்பர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இதற்கான காரணம் பின் வருமாறு.
சாம்பல் புதன் அல்லது
விபூதிபுதன் அல்லது திருநீற்றுபுதன் என அழைக்கப்படும் இந்நாள் கிறித்துவ மதத்தின்
முக்கிய நிகழ்வு நாட்களில் ஒன்றாகும்
. விபூதிபுதன் திருநீற்றுபுதன் தமிழக பண்பாட்டின்படி கூறப்படும் வார்த்தைகள். விபூதி, திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொள்வதுபோல் கிறித்தவர்கள் இன்று நெற்றியில் சாம்பல் இட்டுக்கொள்வதால் இப்பெயர் ஏற்பட்டது.
. விபூதிபுதன் திருநீற்றுபுதன் தமிழக பண்பாட்டின்படி கூறப்படும் வார்த்தைகள். விபூதி, திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொள்வதுபோல் கிறித்தவர்கள் இன்று நெற்றியில் சாம்பல் இட்டுக்கொள்வதால் இப்பெயர் ஏற்பட்டது.
கேள்வி : “ஏன் திருநீர் நெற்றியில் இட வேண்டும்?”
பதில் :- எல்லா செயல்களுக்கும் மிக அற்புதமான காரண
காரியங்கள் கொண்டு செய்யப்பட்டது.....செய்யப்படுகிறது. அக்காலத்தில் மனோவசியம்
செய்பவர்கள் இருந்தார்களாம். மனோவசியம் என்பது மனதை மயக்கி அவர்களது
கட்டுப்பாட்டில் நம்மை கொண்டு வருவது. அப்படி செய்ய நினைப்பவர்கள் நமது
நெற்றிப்பொட்டு (அதாவது புருவங்களின் மத்தியில் தான் அதற்கான மையப்புள்ளி உண்டாம்.)
பகுதியை உற்று நோக்கி அவர்களின் மந்திர தந்திரங்கள் மூலம் நம்மை மயக்கி
விடுவார்களாம். அப்படி அவர்களின் காந்தப்பார்வை நம்மை தாக்காமல் இருக்க அந்த
மையப்புள்ளியை மறைத்து பெண்கள் பொட்டு இட்டுக்கொள்ள வேண்டும் ஆண்கள் திருநீர்
இட்டுக்கொள்ள வேண்டும். இப்படி வந்தது தான் இவ்வழக்கம் என்று கூறுவர்.
“மனிதனே நீ மண்ணாக
இருக்கிறாய் மண்ணுக்குத்திரும்புவாய் மறவாதே!”
என்பதை நினைவுப்படுத்தும் நாள். கிறித்தவமும்
சொல்லும் உலகியல் தத்துதுவம் .
எல்லா மதமும்
சொல்லும் ஓர் உன்னத தத்துவம்.
கொண்டாடப்படுவதின் வரலாறு:
இயேசு கிறிஸ்து
இறப்பதற்கு முன் அவரை கழுதையின் மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச்சென்றார்களாம்.
அப்பொழுது மக்கள் குருத்து ஓலைகளை (தென்னை ஈச்சன் வாழை போன்ற மட்டைகளின் நுனி
இலைகள் குருத்து எனப்படும்.) கையில் ஏந்தி அவரை பின் தொடர்ந்து
சென்றார்களாம்.இந்நிகழ்வை தான் ‘குருத்தோலை
ஞாயிறு’ என்று அன்பர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இயேசு கல்வாரி மலை
மீது இழுத்துச்செல்லப்பட்டு கள்வர்களின் நடுவில் சிலுவையில் அறையப்பட்டு இறந்தது
அனைவரும் அறிந்திருக்கலாம்.
இவ்வாறு நினைவு
நாளில் எடுத்து வந்த குருத்து ஓலைகளை மக்கள் குருவானவரால் ஆசீர்வதிக்கப்பட்டு
தங்களது வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.
அதனை புனிதமாக
பத்திரமாக காத்து வைப்பர்.
அந்த ஓலைகள்
இப்பொழுது தேவாலயங்களில் சேகரிக்கப்பட்டு தீயிட்டுக்கொளுத்தி சாம்பால் ஆக்குவர்.
சாம்பல் புதன் அன்று திருப்பலியின் போது குருவானவர் ஒவ்வொருவரின் நெற்றியிலும்
சாம்பல் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்து
“மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய்
மண்ணுக்குத்திரும்புவாய் மறவாதே” என்று நினைவுப்படுத்திச்செல்வார்.
“ஏன் ?”
மனிதனாக பிறந்த நாம்
இவ்வுலகில் பல்வேறு தீயச்செயல்கள் புரிகின்றோம்,அவற்றை விடுத்து மனம் திருந்தி
வாழவேண்டும் தீய வழிகளை விடுத்து நல்வழி வாழ வேண்டும் எப்படிப்பட்டவராயினும் ஓர்
நாள் இறப்பு வந்துசேரும் என்பதை எடுத்துச்சொல்லும் நாள்.
இந்நாளைத்தொடர்ந்து
40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து ஏழை எளியவர்களுக்கு உதவிபுரிதல் வேண்டும்.
‘கேளுங்கள்
தரப்படும்
தட்டுங்கள்
திறக்கப்படும்
தேடுங்கள்
கிடைக்கும் என்றார்- இயேசு
தேடுங்கள்
கிடைக்கும் என்றார்.’
மிக இனிமையான
கிறித்துவப்பாடல்.
மீண்டும் மீண்டும்
வாசித்துப்பாருங்கள் இந்த அற்புத வரிகளை. வாழ்க்கையில் முன்னேற இதைவிட எளிய
வரிகளில்
விளக்கமுடியுமோ ?.
கிறித்துவத்தின்
முக்கிய கட்டளை இதுதான்.
‘உன்மீது
நீ அன்பு காட்டுவதுபோல உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக.’
எல்லா மதமும் அன்பு ஒன்றையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது போதிக்கிறது
என்பது மட்டும் நிச்சயம்.
அது மட்டும்
நடந்துவிட்டால்.....
எல்லா மதமும் சொல்லும் ஓர் உன்னத தத்துவம் அருமை...
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணார் அவர்களே .
நீக்கு