புதன், மார்ச் 26, 2014

இந்தநாள் இனியநாள்



லகிலேயே மகா பொறுமைசாலிகள் யார் ?

பார்த்தது :-

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதற்கு?
மக்கள் கண்டுகளிக்க .யார் மக்கள்? கோடான கோடிப்பேர்...ஆண் பெண் குழந்தைகள்...இப்படி யாவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார்கள். இதுல எங்க சேனல் தான் ரேட்டிங்ல பர்ஸ்ட் இப்படி அப்படி என்று மார்தட்டிக்கொள்ளும் நிறுவனங்கள்..கன்னாபின்னாவென்று நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றன. அதில் எத்தனை நிகழ்ச்சிகள் குடும்பத்துடன் பார்க்க முடிகிறது.....கொஞ்சம் யோசிச்சுப்பாருங்களேன்.


ஸ்டார் விஜய் டிவி நல்ல பெயர் எடுத்த ஒரு சேனல்...அதுல நடுவுல கொஞ்சம் டிஸ்ட்டர்ப்பண்ணுவோம் அப்படினு ஒரு நிகழ்ச்சி.காமடி நிகழ்ச்சியாம்.
நேரம்:- 23.03.2014 மாலை 8.15 மணியளவில்..நாலு பொண்ணுங்க நிகழ்ச்சியில கலந்துகிட்டாங்க. இரண்டு பேர் நடத்துர ஆண்கள் அதை பார்த்து கைதட்ட ஒரு கூட்டம் காசு கொடுத்து கூட்டினு வருவாங்களோ?...அதுல கேட்கப்பட்ட ஒரு கேள்வி.
 cartoons-desi-glitters-36


மீன்   ..................... நீந்த கற்று கொடுக்க வேண்டுமா?

கோடிட்ட இடத்தை நிரப்ப வேண்டும் அதுவும் வாயில ஐஸ் கட்டியை வைத்துக்கொண்டு..... எங்க சத்தம் போட்டு சொல்லுங்க...பெண்கள் பதில் சொல்ல....... கூலி ஆட்கள்........... கைதட்ட..... சிரிக்க....... 


பை நாகரீகம் கருதி பொது இடங்களில் பேசாமல் எழுதாமல் பல வார்த்தைகளினை நம் தமிழர்கள் தவிர்த்து வந்தார்கள். அந்த சபை நாகரீகம் எல்லாம் தற்பொழுது நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பது வருத்தப்பட வேதனைப்பட வேண்டிய விஷயங்களாகிவிட்டது. ஏன் அமங்கள நிகழ்ச்சிகளைக்கூட நாகரீகமாய் சொல்லிய காலம் மலையேறிவிட்டது.

‘மயிரு என்பது கெட்ட வார்த்தையா ? 

எனக்குத்தெரிந்து அது கெட்ட வார்த்தை இல்லை.

ஆனால் “போடா மயிரு என்று யாரையாவது நாம் சொல்ல முடியுமா? செருப்பை கழற்றி அடிப்பார்கள். எதைசொன்னாலும்  சிரித்துக்கொண்டு சொன்னால் அது தப்பில்லையா? நீங்கள் ஏன் ‘அந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என நம்ம மேலயே பழி போடுவார்கள்.
விவேக் ஜோக்கில் "மைனர்........"என்பதை சைலன்ட் ஆக்கிய சென்சார் போர்ட் எதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இல்லையா? கொண்டுவந்தால் என்ன?

 ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம்
சிரிப்பாய் சிரிக்கிறது தமிழ் சேனல்கள்...என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இப்படி இரட்டை அர்த்தம் கொண்ட கேள்விகள் தேவையா? இதை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க எப்படி முடியும்?.

இது எதை காட்டுகிறது.
·              *   கற்பனை வறட்சி
·               *  தமிழர்கள் இளிச்சவாயன்கள் ‘எதை காட்டினாலும் பார்ப்பார்கள் என்ற எண்ணம்.
·               *    கண்டனம் தெரிவிக்காத ஆல் இன் ஆல் அழகு தமில்மக்கள்.
             
            என்ன பண்றது எல்லாம் தலைவிதி.


அனுபவித்தது:-



உலகிலேயே மகா பொறுமைசாலிகள் யார் ?

இதுதாங்க முதல் ல கேட்ட கேள்வியே.
கேள்விக்கு விடை கண்டு பிடிச்சிட்டீங்களா?

எனது விடை.

துணிக்கடையில் ( சேலை.... சுடிதார்.).... பெண்கள் பிரிவில் வேலை பார்க்கும் நபர்கள் தான்.

சரியா தவறா என்பதை அனுபவித்தவர்கள் சொல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
மதியம் 3 மணிக்கு துணி எடுக்க கடைக்குப்போனோம். இளைய பொண்ணுக்கு  பிறந்த நாள் வருகிறது என்று. பாவம் 3 கடை வேலையாட்கள்..நொந்து நூலாகிப்போனார்கள். வேண்டாம் என்று சட்டசபையை விட்டு வெளிநடப்புச்செய்யும் எம்எல்ஏ போல கம்பீரமாய் வெளி நடப்புச்செய்துவிட்டார்கள்.


னால் 4 வது கடை எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. சுமார் கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்..........ச நேரத்திலேயே எடுத்துட்டாங்க...அம்மா, மூத்தபெண்,இளையவள் எல்லாருக்கும்... போனாபோகிறது என்று எனக்கு இரண்டு பனியன்கள் வாங்கி கொடுத்தார்கள். பில்லு 5478.00 மட்டும் தான்.

இலவசமா ரெண்டு கட்டைப்பை..

வீட்டில் கிளம்பும்பொழுது இப்படி பேசிக்கிட்டாங்க.....யாருக்கும் எதுவும் இல்லை. பிறந்த நாளுக்கு மட்டும் ஒரே ஒரு டிரஸ் வாங்கினு ஒடியாந்திடனும்.

தேங்ஸ்ங்க.




கட்டைப்பை கொடுத்த கடைக்காரருக்கும்....... வீட்டாருக்கும்.
சீக்கிரம் 8.00 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு போலாம் என்றதிற்காக.

8 கருத்துகள்:

  1. இப்போது துணிக்கடையில் மட்டுமல்ல... பொறுமை இல்லாவிட்டால் எங்கும் பணி தொடர்வது நிச்சயமில்லை...

    பதிலளிநீக்கு
  2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

    +1

    பதிலளிநீக்கு
  3. கட்டை பை வீட்டில் ஆயிரம் இருந்தும் கட்டை பைக்காகவே குறிப்பிட்ட கடையை நாடி செல்பவர்களும் இருக்கிறார்கள் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவசம் னா எல்லாருக்கும் ஆசைதான். தங்களின் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  4. டிவி பார்க்கும் அளவிற்கு நேரம் இருக்கிறதா ? சரி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதுங்க மேடம்! அப்பப்ப நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்னு எப்பவாச்சும்..........

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!