திங்கள், மார்ச் 24, 2014

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்
எத்தனையோ வழிகள் உள்ளன. நிறைய படித்திருப்பீர்கள்.அறிந்திருப்பீர்கள் ஆனாலும் செய்ய முடியாதபடி ஏதாவது தடை இருக்கும் ... ஒரு எளிய வழி இது.
உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? கவலையை விடுங்கள் இதோ அதனை குறைப்பதற்கான அருமையான சூப்பர் டிப்ஸ்.

ஜிம்முக்கு போகவேண்டாம் மருந்துமாத்திரைகள் சாப்பிட வேண்டாம் சாப்பாட்டு கண்ட்ரோல் வேண்டாம்...........ஒத்த ரூபாய் செலவில்லாமல்..முடியும்..முயன்றுப்பாருங்கள் வியந்து போவீர்கள்...நீங்கள் மட்டும் அல்ல உங்களைப்பார்க்கும் ஒவ்வொருவரும் எப்படி என ஆச்சர்யப்பட்டுப்போவார்கள்.


சின்ன விளையாட்டு ஒன்று தான் உங்கள் தொப்பையை தூக்கி எறியப்போகிறது. 

தொப்பை:- சுருக்கமாக....தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதன் விளைவாக ஏற்படுவது.மற்றவர்களின் கிண்டல்கேலிக்கு நம்மை ஆளாக்குகிறது.

விளைவுகள்;- உடல்அழகு கெடுதல்,குறட்டைஒலி,மூச்சு வாங்குதல் போன்றவை....

கீழ்கண்ட விளையாட்டின் மூலம் முதுகெலும்புத்தண்டும் நன்கு வளைந்து நெளிந்து வலுப்பெறுகிறது.

இது தான் விளையாட்டு.

மிக சிறிய செயல்பாடுதான் இது.
சிறிய சிறிய கூழாங்கற்கள் ஒரு 25 எடுத்துக்கொள்ளுங்கள்.நேராக மொட்டை மாடிக்குச்செல்லுங்கள்.மாடி வசதி இல்லாதவர்கள் வீட்டிற்குள்ளேயும் செய்யலாம். கற்களை தூக்கி எறியுங்கள். அவை சிதறி விழுந்தவுடன் ஒவ்வொன்றாக சேகரியுங்கள்.

இங்கதான் இருக்கு முக்கிய  குறிப்பு. ஒவ்வொன்றாக அதுவும் ஒவ்வொரு கல்லிற்கும் கால்களின் முட்டியை மடக்காமல் வயிற்றுப்பகுதி நன்கு அழுந்தும்படி குனியுங்கள் அப்புறம் எடுங்கள் அடுத்த கல் இருக்கும் இட்த்திற்கு செல்லுங்கள் நன்றாக நிமிர்ந்து பின் குனிந்து எடுங்கள்


.பின்னர் பின்புறம் சற்று வளைந்து நிமிருங்கள். இப்படியே 25 கற்களையும் எடுங்கள். முடிந்தால் இன்னொருமுறை செய்யுங்கள்... இப்ப எண்ணிக்கை 50 ஆகிவிட்டது... இப்படியாக தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம்...........குறைந்தது இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது எத்தனைமுறை முடிகிறதோ விளையாடுங்கள்.
அப்புறம் என்ன உங்களைப்பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வியே இது தான். “எப்படிங்க இப்படி ஸிலிம்மா ஆயீட்டீங்க? .........என்னங்க நீங்க ரெடியா?
பின் குறிப்பு:- நம்மளப்போல சோம்பேறிகள் யாராவது இருந்தால் அப்பாடா முடியல...நாளைக்கு செய்யலாம்னு விட்டுவிடுவாங்க. 


அதுக்கும் ஒரு டிப்ஸ் இருக்கு....


பத்து ரூபா காயின் கொஞ்சம் ஒரு 200 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டு மேற்படி இறைத்து விளையாடுங்கள். ஏன்னா காசை திரும்ப எடுத்து வைக்கவேண்டும் இல்லனா நமக்கு நஷ்டம் னு ஒரு எண்ணத்திலாவது குனிந்து நிமிர்வார்கள். எப்படி ஐடியா....? 


பகிர்வு பிடித்திருந்தால் முடிந்தவரை அடுத்தவருடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். தொப்பையில்லா சூப்பர்மேன் ஆகுங்கள், ஆக்குங்கள் தெரிந்தவர்களையும். 

முடிஞ்சா இப்படி நடனம் ஆடுங்க மிக மிக அழகாக ஆகிவிடுவீர்கள்.

animated skeleton photo: dancin skeleton
skeleton_dance.gif14 கருத்துகள்:

 1. சூப்பரு சூப்பரு சூப்பரு சூப்பரு சூப்பரு சூப்பரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.

   நீக்கு
 2. I'm sorry to say this. It is not an efficient way and it may cause u back pain if u don't stretch before u do it. And it may tighten ur belly muscle but cannot get rid of ur fat in any way. To get rid of belly, need to burn the fat. Running is the best and healthiest way...!!!!!!!!

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. இரண்டாவது ஐடியாவை மாமூல் கொடுப்பவர்களிடம் கூறினால் போலிஸ்க்கு தொப்பை குறைய வாய்ப்புண்டு !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் என்றால் எல்லாருக்கும் தான் ஆசை. பாவம் ஜீ அவிங்க, வம்புக்கு இழுக்க வேண்டாம்.வருகைக்கும் வாக்களிப்பிற்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
  2. eathuku G 10 rubee coin.... nama allungaluku 1 rubee coin nee pothu.....

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!