சனி, மார்ச் 22, 2014

சாலமன் பாப்பையா- பதிலுரைகள்.
“அந்த பையன் வருங்காலத்துல பெரிய தன்மானஸ்தனா வருவான்

“எப்படி சார் சொல்றீங்க?

“கணக்குல கடன் வாங்கி கழிச்சுப்போடுடா னு சொன்னா, சார் கடன் வாங்குறது தப்பு சார், கடன் அன்பை முறிக்கும் னு சொல்றானே... “

சாலமன் பாப்பையா:-
“கணக்கு போடத்தெரியாம அப்படி சொல்லி இருப்பானோ?...எப்படி இருந்தாலும் அவன் சொல்ற கருத்து நல்லாதானய்யா இருக்கு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“என்னது வேலைக்காரிய வைச்சினு இருக்கீங்களா?

“யோவ் ஒழுங்கா சொல்லுய்யா... வேலைக்கு புதுசா வேலைக்காரி வச்சிருக்கோம். நீ வேற ஏடாகூடமா சொல்லி குடும்பத்துல குழப்பம் செஞ்சுடாத.

சாலமன் பாப்பையா:- 

“இப்படி ஊருக்கு ஒரு ஆள் இருந்தா போதுமே குடும்பம் விளங்கிடுமைய்யா

”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

நர்ஸ் :- “உங்களுக்கு கடைசி ஆசை ஏதாவது இருக்கா அப்படினு டாக்டர் கேட்டுனு வரச்சொன்னார்

பேஷண்ட்:- “என்னங்க இப்படி கேக்கறீங்க.... தூக்கு கைதிய தூக்குல போடறதுக்கு முன்னாடி தானே இப்படி எல்லாம் கேப்பாங்க?
நர்ஸ் :- “உங்களுக்கு தான் நாளைக்கு ஆப்ரேஷன் செய்யப்போறாரே டாக்டர்...அதனாலதான்...

சாலமன் பாப்பையா:- 

“அட தூக்குல போடறதும் இவரு ஆப்ரேஷன் செய்யறதும் ஒண்ணுதான்யா...அதான் இப்படி கேக்கறாரு போல.. பெட்டை காலி பண்ணிட்டு வீடு போயி சேருய்யா ....உயிரயாவது முதல்ல காப்பாத்துவோம்.

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!