புதன், மார்ச் 19, 2014

அன்பெனும் ஊற்று !


அமுசுரபி போல்

அன்பெனும் ஊற்றெடு !



ஆயிரம் கால பகையெல்லாம்

அரண்டோடும்



பார்வைகள் எல்லாம்

புதுசாகும்



செயல்கள் எல்லாம்

செம்மையுரும்



நடத்தையெல்லாம்

நேர்மையாகும்



பேச்சுக்கள் எல்லாம்

பெருமைச்சேர்க்கும்



சினந்த முகமெல்லாம்

சிரிப்பாகும்



சிந்தனை எல்லாம்

சிறப்பாகும்



துக்கத்திலும் துயரத்திலும்

நெடுந்தூரம்

நடந்தப்பின்னும் திரும்பிப்பார்

நிழல்போல் தொடரும்

நட்புக்கள்- மலைத்துப்போவாய்!




இதயத்தின் தாழ் திறந்தால்

இரும்புமனமும் துரும்பாகும்




கணினியும் கவிபாடும்

கட்டாந்தரையும் புல்முளைக்கும்




சினந்தார் எல்லாம்

சுற்றமாவார்




சின்னதாய் அன்பெனும் ஊற்றெடு

சிறு துளியாய்

சிற்றாராய்

சிறுகடலாய்

பெருங்கடலாய் மாறிப்போகும்




உனது

அன்பெனு ஊற்றினிலே

அகிலமெல்லாம் இளைப்பாரும்




முதல் கையை

நீ நீட்டு- நட்பிற்காய்.

நடப்பதை பார்

நானிலமே
நாய்குட்டியாய்
உன்னைச்சுற்றும்




அள்ள அள்ள குறையாத

அட்சயப்பாத்திரமாய்

அன்பெனும் ஊற்றெடு
வானமும் வசப்படும்

அனைத்தும் உனக்கு சாத்தியமே

 மனிதா !
 

10 கருத்துகள்:

  1. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

    +1

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கவிதை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்கள் பொன்னான 'வாக்களிப்பிற்கு' நன்றி ஐயா.

      நீக்கு
  4. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!