சனி, பிப்ரவரி 08, 2014

ஏடாகூட மாணவர்கள் animated teacher photo: Teacher animated gif teacher.gif

ஆசிரியர் :- “காய்கள் பெயர் 5 சொல்லு ?

மாணவர் :- "கத்தரிக்கா,வெண்டக்கா, அவரக்கா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா."

ஆசிரியர் :- ???

...........................................................................................................................................

ஆசிரியர் :- “ 5ம் 5ம் எத்தனை ?

மாணவர் :- “12 சார்

ஆசிரியர் :- “அதெப்படி 10 தானே வரனும் “

மாணவர் :- “12 வரும் சார் “

ஆசிரியர் :- “எப்படி?

மாணவர் :- “தப்பா போட்டா வரும் சார்

ஆசிரியர் :- ???

...................................................................................................................


ஆசிரியர்:- “சாலையின் ஓரங்களில் அசோகமன்னர் ஏன் மரங்களை நட்டார்?

மாணவர் :- “ரோட்டுக்கு நடுவுல மரங்களை நட்டா வண்டி ஓட்டமுடியாது சார் அதான் ஓரமா நட்டார்

ஆசிரியர்:- ???

.....................................................................................................................


ஆசிரியர் :- “உலகத்தில் மொத்தம் எத்தனை கண்டங்கள்?

மாணவர் :- “எட்டு கண்டங்கள் சார்.

ஆசிரியர் :- “ஏழு தானே மொத்தம். எங்க சொல்லு பாக்கலாம்?

மாணவர் :- “ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்,வடஅமெரிக்கா 
கண்டம்,தென்அமெரிக்கா கண்டம்,அன்டார்க்டிக்கா கண்டம்,ஐரோப்பா கண்டம்,ஆஸ்திரேலியா கண்டம்,எமகண்டம்

ஆசிரியர் :- ???

.............................................................................................................

 ஆசிரியர்:-  "வெரிகுட் இன்னைக்கு மட்டும் எப்படி எல்லா கணக்கையும் தப்பில்லாம போட்டுனு வந்திருக்கே?" 

மாணவர் :- "எங்க அப்பா ஊருக்கு போய் இருக்கார் சார்"

ஆசிரியர் :- ???

..................................................................................................................................

ஆசிரியர் :- "என்ன ராமு நல்லா புரிஞ்சுதா ?" 

ராமு:- "புரிஞ்சிது சார்"

ஆசிரியர் :- "என்ன புரிஞ்சுது ?"

ராமு:- "நாளைக்கு நீங்க கேள்வி கேட்க்கும்போது நான் உதை வாங்குவேணு   புரிஞ்சிடிச்சு சார்" 

ஆசிரியர் :- ???
.........................................................................................................

ஆசிரியர் :- "எக்ஸ்ஸாம் ஹால் ல ஏன்டா தூங்குற?"

மாணவர் :- "கேள்விக்கு பதில் தெரியல னா திருதிருனு முழிச்சினு இருக்க கூடாதுனு எங்க அப்பா சொல்லி அனுப்பிச்சார் சார். அதான் முழிச்சினு இல்லாம தூங்கறேன்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!