புதன், பிப்ரவரி 26, 2014

நட்சத்திரங்கள்

 animated stars photo: stars blinking 2_animated.gifநிலாக்குழந்தை 
வாரி இரைத்த
சோற்றின் சிதறல்களோ
நட்சத்திரங்கள்.
 கண்ணகி கோபத்தில் உடைத்த
காற்சிலம்பின்
முத்து பிரல்களோ
நட்சத்திரங்கள்.
அசோக சக்கரவர்த்தி
நட்டுவைத்த மரங்கள்
உதிர்த்த வண்ணபூக்களோ
நட்சத்திரங்கள்.

 


மூதாதையர்களின்
முடிந்து போன வாழ்க்கையின்
மேல் வீட்டு தெரு விளக்கோ
நட்சத்திரங்கள்.

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!