புதன், பிப்ரவரி 26, 2014

மாமன் மனசுமடையை மாற்றி வச்சி மச்சான் நீ

கரம்புக்கு தண்ணீர் விட்டு- அப்பன்

வந்து வைத பின்னே நீ

விழி பிதுங்கி நின்ன கோலம்.
புல்தடுக்கி பயில்வானாய் மச்சான் நீ

பார்த்து என்னை வருகையில தடம்மாறி

வாய்க்காலில் விழுந்து எழுந்து

வாய் கோணி நின்ன கோலம்.
மனச கட்டி நெனப்ப மூட்டையாய்

நெஞ்சுக்குள்ளே வச்ச மச்சான்.

மடித்து கட்டிய மல்லுவேட்டியில்

மூட்டை தூக்கி நின்ன கோலம்.


தின்ணையில உக்காந்து தெரியாத பாட்டுபாடி

தெரு போன எனை பார்த்து

தீவிரமாய் பாட்டை நிறுத்தி திருதிருனு

தேமென்று எழுந்துநீ நின்ன கோலம்.மஞ்ச வச்ச புது சட்ட

மாற்றிப் போட்ட பட்டன் எல்லாம்

ஏறுக்கு மாறாய் என்னடா இது

ஆத்தா சொல்ல அழகாய்நீ நின்ன கோலம்.

என் கண்ணாடி மனசுக்குள்ள

உன் கருத்தமுகம் கண்டுக் கொண்டு

காதலில் காத்திருக்கேன் கல்யாண ஆசைக்கொண்டு

மாமன் மனசு பதில் என்ன ? 

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!