சனி, பிப்ரவரி 15, 2014

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் இல்ல.





காதலில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டுமா ? ஒரு சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக கீழே காத்திருக்கிறது. பாலோ பண்ணுங்க சூப்பரா வாழ்க்கையை ஓட்டுங்க.



காதல் ஒரு போதிமரம்
எவரும் ஞானம் பெறலாம்-
வென்றவர்களும் தோற்றவர்களும்.

காதல் ஒரு வேதம்
எவரும் பின்பற்றலாம்-
மனம் உள்ளவர்கள் மட்டும்.



காதல் ஒரு ஞாபகச்சின்னம்
கனவில் எவரும் கட்டலாம் தாஜ்மகால்-
ஷாஜகான்களும் ஷாஜகானிகளும்.

காதல் ஒரு புற்றுநோய்
சிந்தனை உள்ளவரை
சிறு திசுவிலும் தீவிரமடையும்.

காதல் ஒரு பறவை
மனவானில் சிறகடிக்கும்
மந்திரக்குருவி.

வரமோ சாபமோ
வந்துபோகும் வாழ்க்கையில்-
சிலரை சித்தனாக்கும்
பலரை புத்தனாக்கும்
பெரும்பாலோரை பித்தனாக்கும்.

விற்றுத்தீர்த்த ரோஜாக்கள் சொல்லும்
தூதுபோன குறுஞ்செய்திகள் சொல்லும்
இதயம் படிக்கும்
இனிய இதழ் ..........காதல் என்று.
காதல் காத்திருத்தலால் பொறுமை தரும்.
காதல் விட்டுக்கொடுக்கும்
மேலாக
காதல் எதையும் தாங்கும் இதயம் தரும்.
ஆதலால் காதல் புரிவீர்.



..........இப்படியாக........................
 

காதலன் தன் காதலியை மட்டும்
கணவன்  தன் மனைவியை மட்டும்.
காதலி  தன் காதலனை மட்டும்
மனைவி தன் கணவனை மட்டும்.
 

காதலில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டுமா ?  சூப்பர் டிப்ஸ் இதோ.

நான் மூன்று நாட்களாக காதலைப்பற்றி ஏதாவது எழுதவேண்டும் என்று டிரைப்பண்ணிட்டு இருக்கேன்.  ஒருமுறை..... எல்லாம் டைப் பண்ணி பப்ளிஸ் பண்ணா ஆக மாட்டேன்னு அடம்பிடித்து விட்டது. கடுப்பில் நிறுத்திவிட்டேன். இரண்டாம் முறை இதைப்போலவே ஆனது. மீண்டும் கோபம் மூன்றாம் முறை எல்லாம் நிறைவேறிவிட்டது சில நொடிகள் மின்சாரம் போனதால் எல்லாம் வீணானது. (ஏற்கனவே UPS ரிப்பேர்) இப்ப .....
மீண்டும்.


 விக்கிரமாதித்தன் வேதாளம் பிடித்த கதையாக...... முயற்சி.... அப்பாடா.... சிலிண்டர்காரன் வந்துவிட்டார் நமக்கு மட்டும் இல்லாமல் பக்கத்து வீட்டுகாரர்களின் அநேக கேள்வி பதில்.. ஆதார் அட்டை இணைப்புக்கொடுத்திருந்தால் 1210ரூபாய் இல்லைனா பழைய பில்லே தான் சார்...நண்பர்களுக்கு  செல்லில் விவரித்து பேச்சு..... எல்லாம் மீறி இதோ சென்சாரில் சுருக்கம் செய்யப்பட்டவை உங்களுக்காக.

மிக அழகாக நீளமாக வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இப்பொழுது சுருக்கமாக. அட நான் சொல்ல வேண்டியதே வேறங்க.  சூப்பர் டிப்ஸ் ....இதுதாங்க.....டிப்ஸ்.
புரியலயா.......மேலே கடைசி இரண்டு பாராக்களை கவனமா படிச்சிருந்தா புரிந்திருக்கும் .
 
 முயற்சி....செய்யுங்க.

முயற்சி தாங்க எல்லாவற்றையும் வெற்றி ஆக்கும். ஆகவே வாழ்த்துக்களுடன் கவிதையின் கடைசி இரண்டு வரிகளுடன் முடித்துக்கொள்கிறேன். உங்கள் முயற்சி இப்படியாக இருக்கட்டும்
காதலர்கள் காதலர்களை மட்டும்
திருமணமானவர்கள் துணையை மட்டும்.







4 கருத்துகள்:

  1. நன்றாகவே சொல்லி உள்ளீர்கள்- உங்கள் பாணியில்...

    அன்பான வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் அசுரவேகம் என்னை அசர வைக்கிறது அய்யா. வாழ்த்திற்கு நன்றிகள் பல

      நீக்கு
  2. முந்திரிக் கோட்டைத் தனமா ஆதார் கொடுத்தவர்கள் நொந்து கிடக்கிறார்கள் ,காதலிலும் அவசரம் கூடாதோ ?
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க. தங்களின் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!