சனி, பிப்ரவரி 01, 2014

மூளைக்கு வேலை. (எனக்கும் ...உனக்கும்.)



                        


அது இருந்தா ஏன் பிளாக் ஆரம்பிச்சு குப்பைகொட்டினு இருக்கோம். மூளை இருந்தா இந்த பிளாக் பக்கம் எல்லாம் வருவாங்களா....? ( அப்படி இப்படி யாரும் சொல்வதற்க்கு முன்னாடியே நாமே சொல்லிக்கனும். அதான் சுய மரியாதை.)


மூளைக்கு வேலை அப்படினு கட்டம் கட்டமாய் எழுத்துக்களை வாசிக்க கற்ற (எதை?) ஆரம்பத்தில் நிரப்பிக்கொண்டிருப்பது உண்டு. இணையம், ஃபேஸ்புக், பிளாக், வந்ததில் இருந்து புத்தகம் வாசிப்பு என்பது யாவருக்கும் ஒருசிலருக்கு தவிற மிக மிக குறைந்துவிட்டது என்பது தான் யாவரும் மறுக்க இயலாத நிதர்சனமான உண்மை.


எதையோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது (அப்படி ஒன்னும் பிரமாதமான ஒன்னும் இருக்க வாய்ப்பே இல்லை) கண்ணில் பட்டது பழங்காலத்து...? சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்த வாழ்த்து அட்டை. இப்ப கமெண்ட்ஸ் மற்றும் மெம்பர்ஸ் எப்படி முக்கியமோ அப்ப வாழ்த்துஅட்டைகளை வைத்து தீர்மானிக்கப்பட்டது நட்பு வட்டம். யார் பயில்வான்? அப்படி என்று.



நண்பர்களுக்குள் அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருப்போம். அப்பல்லாம் வேற வேலை கிடையாது. இப்ப இணையத்த விட்டு எழுந்து செல்ல மனமில்லை மற்றும் முடியவில்லை என்பது மனதிற்கும் உடலிற்கும் வேதனையான விஷயமாகிவிட்டது.



வாழ்த்து அட்டையை பார்த்த பிறகு ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே ! நண்பனே !..... ‘ஞாபகம்வருதே.... ஞாபகம்வருதே என ஆட்டோகிராஃப் பாடலும் ஞாபகம் வர... சிந்தனை....சிக்கிக்கொண்டது....கடிதம் எழுதும் முறைகளில். 



வித்தியாசமான கடிதங்கள் எழுதும் பழக்கம் எங்களுக்குள் இருந்தது உண்டு. “என் பேச்சி காயா? பழமா?இதுதான் கடிதம். ஒரு மாதம் கழித்து பதில் வரும் “பழம். அப்புறம் வாராவாரம் ஆரவாரக் கடிதங்கள் குவியும். மீண்டும் கோபம் எப்படியோ புகுந்துக்கொள்ளும்... மீண்டும் இடைவேளை.... அப்புறம் மீண்டும் காயா? பழமா?...... தொடரும்......




என்ன தலைப்பிற்கும் தகவலுக்கும் தொடர்பில்லையே ? இதுல என்ன மூளைக்கு வேலை எனக்கேட்பது புரிகிறது.




வாங்க.... உட்கார்ந்து பேசி தீத்திக்குவோம். நமக்குள் வம்பு வேண்டாம். அப்புறம் நான் “என் பேச்சி நீங்க காயா? பழமா ? அப்படினு உங்களுக்கு மெயில் அனுப்பவோ பின்னூட்டம் போடவோ கமெண்ட் போடவோ வேண்டியதாகிவிடும்.




அப்படி வித்தியாசமான கடிதங்கள் எழுதும் வழக்கம் எங்களுக்குள் இருந்தது. அதனுடைய மாதிரிதான் இந்த படம். புரிகிறதா ? பாருங்கள். புரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.
இப்படி கடிதம் முழுக்க இருந்தால் எப்படி இருக்கும்? இது தான் மூளைக்கு வேலை. தொடருங்கள்.
 
பரிசுப்போட்டி:- 
இது ஒரு கவிதை. இதனை கண்டு பிடிப்பவர்களுக்கு மேலும் ஒரு கவித ? அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.ஹா...ஹா....


அவர்களுக்கும் உங்களுக்கும்  இப்படி ஒரு கடிதம் இப்பொழுது எழுத முடிந்தால் எழுதி போட்டுவிடலாம் சந்தோஷமாக - மெயிலில்.
புலம்பல் :-

 

எல்லாத்தையும் நல்லா படிச்சுட்டு ஒன்னுமே சொல்லாம போனா எப்புடி?   ஃபோக் ஐடியில வந்தாவது ஏதாவதுசொல்லிட்டுப்போங்க ....

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நண்றி ஐயா. கவனித்தீரா? 'ண்' . தங்களின் தொடர் வாழ்த்துதலுக்கு.பெரிய நன்றி .அதற்கு தான் "ண்'

      நீக்கு
  2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

    +1

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!