வெள்ளி, ஜனவரி 31, 2014

பயணிகள் கவனிக்கவும்

பயணி :-       " இவ்வளவு உயரமான மலைமேல பஸ் ஓட்டும்போது 
   உங்களுக்கு பயமே இல்லையா ? பயமா இருந்தா எப்படி  ஓட்டுவீங்க ?"

டிரைவர் :- "எனக்கு பயம் வரும்போதெல்லாம் கண்ணை இருக்கி   மூடிகிட்டு ஓட்டுவேன் பயம் போயிடும் "
பயணி :-  ???....!!!!

**************************************************
 
நடத்துனர் :-   "என்னப்பா எல்லோரும் 500 ரூபாய் நோட்டா கொடுத்தா எப்படி? சில்லறை இல்லாதவங்க எல்லோரும் கீழே இறங்குங்க."
பயணி :-  " உங்ககிட்டயும் தான் சில்லறை இல்லனு சொல்றீங்க. அப்ப நீங்களும் எங்க கூடவே இறங்குங்க"
நடத்துனர் :- ???
***************************************************
நடத்துனர் :- "ஆம்பிளைங்க எல்லோரும் இறங்கி வந்து பஸ்ஸ                        தள்ளுங்க  அப்ப தான் வண்டி கிளம்பும் "
பயணி :-  "என்னங்க இவ்ளோ தூரம் தள்ளியும் பஸ் கிளம்பல?."
நடத்துனர் :-  "யோவ் டிரைவர்!  கியர போடுயா வண்டி கிளம்பட்டும்"
டிரைவர் :- ( பின்னால் பஸ்ஸினை தள்ளிக்கொண்டே) யோவ் நீ தான் ஆம்பிளைங்க எல்லோரையும் இறங்க சொல்லிட்ட  அதான் நானும் இறங்கிட்டேன் . நான் எப்படி கியர் போடரது"
நடத்துனர் : ???
**********************************************
 
நபர் 1 :-  "வாத்தியாரை பேருந்து நிலைய அறிவிப்பாளரா போட்டது ரொம்ப தப்பாப்போச்சு "
நபர் 2 : " ஏன் என்ன ஆச்சு ?"
நபர்1 :- 'பயணிகள் கவனிக்கவும்' அப்படினு சொல்லிட்டு  அப்படி கவனிக்காதவங்க தலையில பக்கத்துல இருக்கிறவங்க ஒரு கொட்டு கொட்டுங்கனு சொல்றார் "
நபர் 2 :- ?????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
************************************************
 
மாணவன் 1 :- "எங்க அப்ப ஓடுற பஸ்ஸ கையாலயே நிறுத்திடுவார் .அவ்ளோ பெரிய பயில்வான் "
மாணவன்2 :-" இதென்ன பிரமாதம். எங்க அப்பா ஓடுற பஸ்ஸ வாயலயே நிறுத்திடுவார்."
மாணவன் 1 :- "அதெப்படி ?"
மாணவன் 2 :- "எங்கப்பா தான் கண்டக்டர் ஆச்சே. விசில் அடிச்சா வண்டி  தானா நிக்கிது"
மாணவன் 1 :- !!!!!!
*************************************

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அப்பா..... சுவாமி ! உங்களைப்போல் சூப்பர் பாஸ்டா யாரும் வாழ்த்து சொல்ல முடியாதுங்க.
      முதல்ல மனம் இருக்கணும்
      அப்புறம்
      நேரம் ஒதுக்கணும் ...எல்லாமே இருக்கிற உங்களை ஏன் 'கருத்துரைச்செம்மல்' அப்படினு சொல்லக்கூடாது. பட்டம் வழங்க திரு ரமணி ஐயா முன்மொழிந்து செய்து முடிக்க வேணும்.

      நீக்கு
  2. அனைத்தும் அருமையான
    நகைச்சுவைத் துணுக்குகள்
    படித்து ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா. தங்களின் வருகை மிக்க மகிழ்வளிக்கிறது

      முதல்ல மனம் இருக்கணும்
      அப்புறம்
      நேரம் ஒதுக்கணும் ...எல்லாமே இருக்கிற திரு DDயை ஏன் 'கருத்துரைச்செம்மல்' அப்படினு சொல்லக்கூடாது. பட்டம் வழங்க நீங்கள் முன்மொழிந்து செய்து முடிக்க வேணும்.எல்லோரும் மகிழ்வார்கள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் மேலான வாழ்த்திற்கும் இரசிப்பிற்க்கும் வந்தனங்கள் சகோ.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!