ஞாயிறு, ஜனவரி 19, 2014

மங்கிப்போன மூளைகள்ஒற்றைவரி ஆத்திச்சூடியையும்
இரட்டைவரி திருக்குறளையும்
எளிதாய் புரிந்துக்கொண்ட
நம் முன்னோர்கள்......


நமக்கோ
பக்கம் பக்கமாய்
எழுத வேண்டியுள்ளது
எதையும் சொல்ல.


ஒற்றைவரிக்கும் 
இரட்டைவரிக்கும்
ஏகப்பட்ட
படிப்பாளிகள்
விளக்கம் சொல்ல 
வேண்டியுள்ளது
விரிவாக.

குருகுல கல்வி......
பல்கலைகழகங்கள்........
எது சிறந்தது என 
என் 
எண்ணம் முற்று பெறவில்லை.....
 


மங்கிப்போனதோ-
 நம் மூளைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!