வியாழன், ஜனவரி 30, 2014

ஆதலால் கவிதை எனலாம்...

                                  

லக்கணம் ஏதுமின்றியும்


மரபுகள் மீளப்பட்டும்

சந்தங்கள் தப்பியிம்

சந்திப்பிழைகளும் கண்டு

கால்கள் உடைந்து

கொம்புகள் நீண்டு

எழுத்துப்பிழைகள் கொண்டும்

வார்த்தைகள் தவிர

வாக்கிய அமைப்பின்றியும்

எல்லோருக்கும் போல்

எனக்கும் புரியவில்லை எனினும்

அப்படி இப்படி எப்படி

இருப்பினும்....

வாசிக்கும்பொழுது

நினைவுகளில் நீ வருகிறாய்.

ஆதலால்

இதனை

கவிதை எனலாம்.

உன்னைப்பற்றி சொன்ன

ஒரே காரணத்திற்காக.
                                                       

4 கருத்துகள்:

 1. // நினைவுகளில் நீ வருகிறாய்... //

  அருமை...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் தொடர் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
 3. //உன்னைப்பற்றி சொன்ன

  ஒரே காரணத்திற்காக.//
  செம செம ....
  இளமை தெறிக்கும் வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வரிகளை யாராவது ரசிப்பார்களா? என ஏங்கிக்கொண்டு இருந்தேன்... உண்மையிலேயே. உங்கள் இரசனைக்கு மிக்க மகிழ்ச்சி. காதல் என்பதை இந்த வரிகள் தான் தாங்கிக்கொண்டிருக்கிறது.என்பது என் எண்ணமாய் இருந்தது....மேலுள்ள கவிதையில்... . கவிதையா இல்லையா என்பதை நண்பர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!