திங்கள், ஜனவரி 27, 2014

குடியரசு தினவிழாவில் குடிமக்களை ஏமாற்றிய தமிழக அரசு.


சீரியஸா படிக்கணும் ஆனா கடைசியா சிரிக்கணும்.



           தமிழக அரசு ஏமாற்றியது.



குடியரசு தினவிழாவில் குடிமக்களை ஏமாற்றியது தமிழக அரசு.
26.01.2014 நேற்று இந்திய நாட்டின் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன. குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் தமிழக குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பாவம் செய்வது அறியாமல் முழித்தனர்.


                காரணம்:-  'டாஸ்மாக்' விடுமுறை.


                          -000-


“என்னங்க ஆச்சர்யமா இருக்கே! ஒரே கையெழுத்துல உலகத்தையே திருப்பிப்போட்டுட்டாரா ?


“ஆமாங்க பசங்களோட வரைபட புத்தக WORLD MAP ல கையெழுத்துபோட்டுட்டு அடுத்த பக்கம் திருப்பியதை தான் அப்படி பெருமையா சொல்லிக்கிறார்
                              
                               -000-


“நீதிபதியே எழுந்து நின்னு வணக்கம் சொல்றாரே அவரு என்ன அவ்ளோ பெரிய ஆளா?


“பின்ன என்ன நீதிபதியாவது ஆறுமாசம் ஒருவருஷம் அப்படிதான் தண்டனை தருகிறார். இவரு கல்யாண புரோகிதர். ஆயுள் தண்டனையா இல்ல தர்ரார்.அப்ப அவரவிட இவரு பெரியாஆள் தானே.
                              
                               -000-



“ம்ஹூம் உனக்கும் அவருக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. “


“அவ்ளோ பெரிய பணக்காரரா?


"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ இருக்கிறது முதல் மாடி. அவரு இருக்கிறது 7வது மாடி அதைசொன்னேன்”.
                             
                             -000-


லொள்ளு:-


செல்லம்  !   ஜோக்குனு சொல்லியும் சிரிக்காத நம்ம மாமாவ பாத்து  ஒரு கண்ணடி.




Sweet-baby

6 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!