புதன், ஜனவரி 22, 2014

ஹார்மோன்கள் செய்யும் ஆப்போசிட் அராஜகம்ஸ்

சட்டை மேலே பனியன் போட்டு வெளியேவர
சண்டை நடந்தது அப்பன்ஆத்தா எனக்கும்
கூறு கெட்டுப்போச்சு புத்தி குதித்தார்கள்
எனக்கென்ன ஆச்சு......


புது பேனா பார்த்து பார்த்து வாங்கி
பாக்கட்டில் வைக்காமல் கேழே போட்டு
பழையதை மீண்டும் பாக்கட்டில் செருக
விற்பனைப்பெண் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்
எனக்கென்ன ஆச்சு....


என்னால் தலைகீழாய் நடப்பட்ட தக்காளிச்செடி
வானம்பார்த்து வேர்களைத்தாங்கி வேடிக்கை பார்க்கிறது
மூச்சுவிட முடியாமல் மடிந்ததை மற்றார் திட்ட
வெட்கம் கெட்ட என் செயலைப் பார்த்து
எனக்கென்ன ஆச்சு.... 

கணினி கோளாரா கூப்பிடு அவனை என்றவர்கள்
அவனா வேண்டாம்சாமி உனக்கு ஒருகும்பிடு
செல்லமாய் சொல்லிப் போனார்கள் எனைப்பர்த்து
எனக்கென்ன ஆச்சு.... 


எல்லாமே

ஹார்மோன்கள் செய்யும் 

ஆப்போசிட் அராஜகம்ஸ் ஸா இருக்குமோ?
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!