சனி, ஜனவரி 25, 2014

ஐன்ஸ்டீன்


நான் கம்பியூட்டர் கற்றுக்கொண்டது எப்படி ?
விடை உள்ளே....

பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் படித்திருப்பீர்கள்..... உங்கள் நினைவிற்கு......

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)  என்ற பிரபல அறிவியல் மேதை. அவரைப்பற்றி மேலும் அறிய  இங்கே  சென்று பார்த்துக்கொள்ளவும். அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வதில் ஆனந்தப்படுகிறேன்.

இவர் அறிவியல்மேதைகளின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை ஆற்றுவார். பல மைல்கள் காரிலேயே சென்று வருவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிப்போனது. அவரது கார் ஓட்டுநரும் அவரின் உருவசாயலை பெற்றிருந்தார். (ஏறக்குறையனு நாம் சொல்றது இல்லையா அது போல.)
ஒரு நாள் அப்படி ஓட்டுனருடன் பயணம் செய்யும் பொழுது  ஓட்டுநர் கேட்டார்

“இன்றைக்கு என்ன டாபிக் சார்  

“பிரபல மிக சிக்கலான தியரியை பற்றி பேசப்போகிறேன். இப்பொழுது வரும் மேதைகளுக்கு என் முகம் புதியது எல்லோரும் இளம்மேதைகள். எப்படி புரிய வைப்பது என எனக்கே குழப்பமாக உள்ளது.

ம்ஹும் இதானா டாபிக் “

 ஐன்ஸ்டீனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“என்னப்பா இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட... இதை எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்.. எத்தனை முறை பேசியும் இன்னும் பல மேதைகள் புரிந்துக்கொள்ளவே திணருகிறார்கள்...நீ என்னடானா ம் ஹூம் அப்படினு சிம்பிலா சொல்லிட்ட

“அட போங்க சார் இந்த தியரியை பற்றிதான் போன ‘மீட்டிங்லயேயும் பேசனீங்க.

“நீ என்ன இவ்வளவு அலட்சியமா சொல்ற. மேடையில பேசி பாத்தா தான் உனக்கு தெரியும் கஷ்டம்.

“சார் எனக்கே அந்த தியரி அத்துபடியாயிடுச்சு சார் சும்மா போர் அடிக்காதீங்க. வேற டாபிக் ஏதாவது பேசுங்க.

ஐன்ஸ்டீனுக்கு மீண்டும் தூக்கிவாரிப்போட்டது.


ஆண்டு கணக்கில் இரவு பகல் பாராது நாம் கண்டுபிடித்த இதனை இவன் இப்படி சாதாரணமாக புரிந்துக்கொண்டதாக சொல்கிறானே...உண்மையா? இல்லை பொய்சொல்கிறானா ? அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.


மின்னல் வேகத்தில் அந்த யோசனை தோன்றியது.


“சரிப்பா நீ புரிந்துக்கொண்டாய் அல்லவா நீயே இந்த மீட்டிங் ல பேசு பார்ப்போம் என்றார் “

“என்ன சார் சொல்றீங்க?

“சார் நான் எப்படி... டிரைவர் இழுக்க ...

“ஏன் பயப்படுகிறாயா?ஒன்னும் தெரியாதா ?“

“எனக்கு ஒன்னும் பயம் இல்ல சார் “

“அப்ப வகையா இப்ப மாட்டிக்கப்போற....
 நீ உன் டிரஸ்ஸினை கழட்டி எனக்கு கொடு. என் உடையை நீ போட்டுக்கோ நீ என்ன மாதிரியே இருக்கிற.... அதுவும் இல்லாம இங்க  இருக்கிறவங்க இதுவரை என்னை நேரில் பார்த்ததில்லை.... அதனால நீயே பேசு அப்படி பேசிட்டா நீ என்ன கேட்டாலும் செய்றேன் என்றார் 
இருவரும் உடை மாற்றிக்கொண்டார்கள்.


 ஓட்டுநர் மேடையில் ஏறி நிஜ ஐன்ஸ்டீன் போலவே சரளமாக அந்த தியரியை விளக்கிக்கொண்டு வந்தார். ஐன்ஸ்டீன் நாற்காலியில் திகைப்புடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.


ஐன்ஸ்டீனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை...


அதைவிட ஆச்சர்யம் மேதைகள் கேட்ட பல்வேறு வகையான குறுக்கு கேள்விகளுக்கும் தம்மைப்போலவே விளக்கம் சொன்னது..
உண்மையிலே இவன் திறமைசாலி தான் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நம்மை விட பெரிய அறிவியல் மேதையாக கூட வந்திருப்பான் என மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தார்.


அப்பொழுது.... மிக கடினமான கேள்வியை மேதை ஒருவர் கேட்க....


ஐன்ஸ்டினுக்கே சற்று யோசிக்க வேண்டியதாக இருந்தது...விடையை யோசித்துக்கொண்டார்.


மேடையில் இருந்த டிரைவருக்கு விடை கூறத்தெரியவில்லை....சிறிது நேரம் மௌனமாக இருந்தார்....தண்ணீர் வாங்கி குடித்துக்கொண்டான்.‘நல்லா மாட்டிக்கொண்டாயா ? என மனதிற்குள் சிரித்துக்கொண்டார்...ஐன்ஸ்டீன்.


மேடையில் சிங்கமென முழங்கினான்...ஓட்டுநர்.


 “இது என்ன ஒரு கேள்வியா? இந்த கேள்விக்கு என் கார் டிரைவர் கூட பதில் சொல்வான்...அவனை அனுப்புகிறேன். அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள். நான் சிறிது ஓய்வு எடுக்கிறேன். ஏம்பா டிரைவர் நீ வந்து கொஞ்சம் சொல்லுப்பா என்றானே பார்க்கலாம்...
ஐன்ஸ்டீனுக்கு அப்படியே மயக்கமே வந்து விட்டது............என்ன ஒரு புத்திசாலிதனம்....எளிதாக தப்பித்துக்கொண்டான்....

வேறு வழியில்லாமல்.....

அதனை ஐன்ஸ்டீன் மேடை ஏறி விளக்கி விட்டு வந்தாராம்.கேள்விக்கு வருவோம்.

 நான் கம்பியூட்டர் கற்றுக்கொண்டது எப்படி ?.
           டிரைவர் போல தான்.நம்ம நாட்டுல முல்லா முல்லா (ஒரு முல்லா தாங்க) அப்படினு ஒருத்தர் இருந்தாராம் . அவரும் மிக மிக புத்திசாலியாம். ஒருமுறை அவரை ஒரு ஊருக்கு பேச அழைத்தார்களாம். அந்த ஊர்கார்ர்களுக்கு முல்லா மேல பயங்கர கோபம் இயவனி எப்படியாவது பேச வச்சி வம்புல மாட்ட வச்சி அடிச்சி ஊரவிட்டே ஏன் நாட்டை விட்டே துரத்தனும் அப்படினு வெறியோட இருந்தாங்களாம்.
இது முல்லாவிற்கு தெரிஞ்சுப்போச்சு.

முதல் முறை கூட்டம் நடைபெற்றது. முல்லா மேடை ஏறி பேச ஆரம்பித்தார்.

நான் என்ன பேசப்போகிறேன் அப்படினு உங்களுக்கு தெரியுமா? அப்படினு கேட்டாராம் மக்கள் “தெரியாதுஅப்படினு சொன்னார்களாம். உடனே முல்லா என்ன பேசபோறேன் அப்படினு தெரியாதவங்ககிட்ட பேசி என்ன புண்ணியம் அதனால நான் பேச மாட்டேன் அப்படினு சொல்லிட்டு கிளம்பிட்டாராம். மக்கள் ஏமாந்து விட்டனர்.

இரண்டாம் முறை.

இப்ப என்ன பேசப்போறேனு தெரியுமா அப்படினு கேட்டாராம்.மக்கள் உஷாராகி ஓ தெரியுமே என்றார்களாம்.
தெரியுமா அப்படினா தெரிஞ்சதை நான் எதுக்கு திரும்ப பேசனும் அப்படினு சொல்லிட்டு இப்பவும் தப்பிச்சு போயிட்டாராம்.

மூன்றாம் முறை.
இப்ப நான் என்ன பேசப்போகிறேனு உங்களுக்கு தெரியுமா முல்லா கேட்க
பாதி பேர் தெரியும் என்றும் மீதிபேர் தெரியாது என்றும் சொன்னார்களாம்.
முல்லா “அப்ப தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. நான் எதுக்கு பேசனும் அப்படினு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டாராம்.

என்னை மாதிரி.   2 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரர்
  ஐன்ஸ்டின் கார் டிரைவரின் சமயோசித புத்தி வெகுவாக ரசிக்க வைத்தது. ஏற்கனவே படித்தது தான் இருப்பின் தங்களின் எழுத்து நடை புதுமையாய் படிப்பது போலவே இருந்தது. வாழ்த்துகள். கணினி கற்றுக் கொண்ட கதை கேட்க நன்றாக இருந்தது. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா.
   எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அதனால் தான் முதல் பத்தியிலேயே உங்கள் நினைவிற்கு என்று குறிப்பிட்டேன்.வாழ்த்திறு மீண்டும் நன்றிகள் பல.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!