அனுபவம் புதுமை
வாயாடி
இதற்கு சரியான எதிர்சொல், தமிழ் அறிஞர்கள்,
கற்றோர், மொழி பற்றாளர்கள் தெரிவிக்கவும்.
அத்தைக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனையில் உள்ளார்கள்.
சென்று பார்த்துவிட்டு வர நானும் அம்மாவும் கிளம்பிச்சென்றோம். மிதமான வேகம் உடனே
அசுர வேகம்…தனியார் பேருந்துகளின் அட்டகாசங்கள்.... படியிலேயே
பதினைந்துபேர் அடுத்தடுத்த நிறுத்தத்திலும் ஏற்றி இறக்கி கொஞ்சம் இல்ல நிறையவே
சிரமம்...பேருந்து பயணங்கள். ஏறக்குறைய
உயிரை கையில பிடுச்சினு போறதுனு சொல்றாங்களே... அதுல இதுவும் ஒன்னு. ஆமாங்க
சில்லறைய திருப்பி தராத நடத்துனர்கள் இன்னும் நிறையபேர் இருக்காங்க. ஒரு
டிக்கெட்டுக்கு இரண்டு ரூபா தரமாட்டேங்கிறான். அந்நியன் ஸ்டைல்ல கணக்குப்போட்டா
....எங்கியோ போகும் கணக்கு. இவங்கள திருத்த ஒரு இந்தியன் தாத்தாவே பொறக்கனும்போல.
ஆஸ்பிட்டல்.
‘கொடுமை கொடுமைனு கோவிலுக்குப்போனா அங்க ஒரு
கொடுமை தலை விரிச்சு ஆடுதுனு’ ஒரு கிராம சொலவடை.(
ஆமாங்க மெதுவடை மசால்வடை காரவடை ஆமைவடை அதுபோல இதுவும் ஒன்னோ? )
காலில் ஒடிவு.
சுகர்
இருக்கு அதனால சுகரை குறைச்சு அப்புறம் தான் ஆப்ரேஷன் செய்ய முடியும் மூனு நாலு
நாள் ஆவும் -இது டாக்டர். வலி தாங்க முடியல எப்படியாவது வேற ஆஸ்பிட்டல் போயி உடனே பாக்கலாம்- இது அத்தை. அட காசுக்குப்பாக்கிறாங்கப்பா
இங்க டிரீட்மென்ட் ஃப்ரி-இது சுற்றம். என்ன செய்வது என்று எல்லாருக்கும் குழப்பம்
( கவனிக்க தமிழ் தாதாக்கள் சின்ன சந்தேகம் எல்லாருக்கும் இது சரியா எல்லோருக்கும்
இது சரியா ? ). கவலை எங்கும் வியாபித்து இருந்தது.
பயணம்: பேருந்து நெரிச்சலில் பாட்டியம்மா
ஒருவரும் இடிபாடுகளில் சிக்கித் தவித்து “ஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லு”
“ஆமா இங்க எடத்த வச்சிக்கிட்டுதான் நாங்க நகர மாட்றோமாக்கும்”.
“அட வயசானவங்க தானே முடியாம சொல்றாங்க கொஞ்சம் பாத்து
நில்லுமா”
“நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க நீங்க தான்
ஜாலியா உட்கார்ந்துனு இருக்கீங்களே” “அம்மாடி இது இன்னா கூட கூட பேசுது” “ஆங்க்
வாயிருக்கு பேசறேன் ஏன் நீ பேசல?ஆமா என்ன
எதுக்கு ‘இது’ ன, இதுனா எது ? “ “யம்மா தாயே போதும் விடுடி” நண்பி சொல்ல ‘களுக்
களுக்’ என
சிரிப்புகள்.நடத்துனரின் விசில் சத்தம் பேருந்தின் எஞ்சின் சத்தம் டிவிடியுன்
ஸ்ட்ரியோ சத்தம் எல்லாம் கடந்து நடந்தது வாய் யுத்தம் “சும்மா இருடி பாட்டீயே
இம்மாம் பேசுது “ பாட்டி ஏதோ முனகிக்கொண்டே திரும்பிக்கொள்ள “இன்னா சும்மா முனகுற” “ஏம்மா பாட்டி
தான் கம்முனு ஆயிடுச்சே நீ விட மாட்ற பாத்தா படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க” “ஏன் படிச்சா
பேசக்கூடாதா? “ எப்பா சரியான வாயாடியா இருப்பா போலிருக்கே “ “ஆமா உங்களுக்கு
எல்லாம் வாயே இல்ல பாரு” அந்த அம்மா
கப்சிப்..நமக்கேன் வம்புனு யோசிச்சுதோ என்னவோ ? எல்லாவற்றையும் தாங்கி பேருந்து
சென்று கொண்டிருந்தது.........
‘ஆமான்டா
அவன் சரியான ஐடியா மன்னன்’....... ‘இன்னா டெக்னிக்கலா யோசிக்கிறாம்பா’.....அவனுக்கு
சரியான கிரிமினல் மூளை.... இப்படி சொல்லுவது........சிலரை குறித்து
கேள்விபட்டிருப்போம் கேட்டிருப்போம். இப்படி சிந்திப்பவர்களால் டெக்னிக்குகளும்
டெக்னாலஜிகளும் வளர்ந்து விட்ட உலகில் எல்லாம் கிடைக்கிறது ஒரு சிலதை தவிர ( காசு
கொடுத்தாலும் கிடைக்காததை யாராவது பட்டியல் போட்டு உடனே ஃபேஸ்புக்குல அப்டேட்
போடுங்கப்பா கேள்விப்பட்டு ரொம்ப நாள் ஆயிடிச்சு ) பட்டியல் மிக மிக சுருக்கமாகவே
இருக்கும் என நினைக்கிறேன் ஏன்னா எல்லாம்
கிடைக்குது குவிக்கர் ஓஎலெக்ஸ் போய் பாருங்க.நாய் குட்டி முதல் நகைநட்டுவரை
கிடைக்கும்.
எலும்பு
முறிவு பிரிவு....
சுற்றிப்பார்த்தால்
தலையே சுற்றி விடும். என்னென்ன வகை வகையான பிரச்சனைகள்...அப்பா..... சாமி..
வேதனை... வேதனை வேதனை...இதையெல்லாம் பார்க்குபோது இதுவரை எவ்வித பெரிய வியாதியும்
(சுகரும் பிபியும் தவிர. இது இல்லாதவங்க
கடவுளுக்கு நன்றி சொல்லுங்கனு சொன்னா நிச்சயம் கடவுளுக்கு ஒரு நன்றி கூட
கிடைக்காது. ஃபேஸ் புக்குல அப்டேட் பண்ணிட்டு யாருமே லைக் போடாத பதிவுகள் போல கடவுள்
ஏமாந்து தான் போவார் ) இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகளாய் நம்மை உயிரோடு விட்டுவைத்ததற்காகவும்
அவங்க அவங்க குல தெய்வத்திற்கு கோடானா கோடி நன்றி சொல்லுங்கள். சின்ன முள்ளு
குத்தினா ஏன் சின்ன ஊசி போட்டா கூட கத்தி ஊரையே கூப்பிடும் அளவுக்கு
“நோயற்ற
வாழ்வே குறைவற்றச் செல்வம்”-(அந்த காலத்திலேயே என்னமா யோசிச்சி
எழுதியிருக்காங்கப்பா.).. சத்தம் போட்ட மனித உயிர்கள் இன்று அடங்கி கிடக்கிறது...
படுக்கைகளில்...அத்தனை வியாதிகளுக்கும் ஆப்ரேஷன்களுக்கும் அடிமைப்பட்டு.
“இவள யாருதான்
கட்டினு அழப்போறானோ.”..மெதுவாக பக்கத்தில் இருந்தவரிடம் ஒரு
நடுத்தர வயது அம்மணி..அதையும் காதில் வாங்கிய அந்த பெண்.....”எவனாவது இருந்தா
சொல்லுங்க அழவச்சிடலாம்” பகீர் சிரிப்புகள்...... டிவிடி அழகாய்
பாடிக்கொண்டிருந்தது.......பெண்ணாக பிறந்தாலே பெரும்பாக்கியம் சொன்னாறே
முன்னோர்கள் ஒரு வாக்கியம்.......இந்த பாட்டு பாட்டிக்கா ? இல்ல அந்த
பெண்ணிற்கா ? அல்ல பாட்டிக்கு பரிந்து பேசிய அந்த நடுத்தர வயது அம்மணிக்கா?
பெண்கள்
படும் பாடு வெளியில் சொன்னால்......பெரும்பாக்கியம் மிஞ்சுமோ?
எனக்கு
மிக அதிசயமாய் இருந்தது சுச்சிவேஷன் சாங்குனு சொல்லுவாங்களே அதானோ இது.
அழகான அளவான முகம்...சினேகாவை கிராஃபிக்ஸ் ல கொஞ்சம்
கருப்பாக்கி பாருங்க..கலர்.. நான்கடிக்கும் இரண்டரை அடிக்கும் இடைப்பட்ட கூந்தல்
நீளம்....வெள்ளை வண்ண சுடிதார் கழுத்தில் பயிற்சி நிறுவனத்தின் அடையாள அட்டை.
செவிலியர் பயிற்சிக்கான அடயாளங்கள்.....நிறுத்தத்தில் இறங்கும் போது.........
“பாட்டி..... சும்மா...... சும்மா தமாஷுக்கு தான் பேசினேன் கோச்சிக்காதீங்க”.......பாட்டியிடம்
இருந்து பதில் இல்லை என்பதிலிருந்து பாட்டியின் கோபம் இன்னும் தீரவில்லை என்பது
எல்லோருக்கும் புரிந்திருக்கும்.... வயசானவங்களுக்கு ரோஷம் அதிகம் தான்.
அந்த வாயாடியை யாருக்காவது பிடித்திருந்தால்
கூடகூட வாயாடத்தெரிந்த வாயாடன் (இப்படி ஒரு வார்த்தையை வழக்கத்தில் நாம் பயன்படுத்தவில்லையே
ஏன்?) மட்டும் விழுப்புரம் பாண்டி
பகுதிகளில் தேடி திருமணத்திற்கு அப்ளிகேஷன் போடலாம்.
‘ஹியூமன்
ஃபேர்பார்ட்ஸ் கடை’
இங்கே உங்கள் உடலுக்குத்தேவையான அனைத்து வகை
உதிரிபாகங்களும் கிடைக்கும்.....
இப்படி ஒரு கடைகள் விரைவில் வந்தாலும்
ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதிலும் உட்பிரிவுகள் ‘ஹியூமன் ஹார்ட்வேர்ஸ்’ ‘ஹியூமன் சாப்ட்வேர்ஸ்’
ஹார்ட்
வேர்ஸ்- எலும்புகள் (பிளாஸ்டிக்ஸ்...பைபர்ஸ்.ஸ்டீல்ஸ்.விலைக்கு ஏற்றார் போல..இப்படி)
பொருத்த தேவையான பிளேட்டுகள் போல்டுகள் நட்டுகள்....மூட்டுவகைகள்... கனுக்கால்
...தொடை எலும்புகள்.... கை... கால்..எலும்புகள்...இப்படி.
சாப்ட்வேர்ஸ்-
இரத்தம்... தோல்....கிட்னி..இதயம்.. ( இதயம் ஹார்ட்வேரா சாப்ட்வேரா கல்லான இதயம்
அப்படினு ஒன்னு இருக்காமே...)
அட நான் பேச வந்ததே வேற. உங்க
கம்பியூட்டரில் ஏற்படும் பிரச்சனைக்கு எளிய வழியில் தீர்வு சொல்லவே வந்தேன். என் டெக்னிக்கை பயன்படுத்தி பலன்
அடைந்தவர்கள் கமெண்ட் பாக்ஸ்ல அப்புறமா தேங்க்ஸ் சொல்லுங்க.
ஒரு
டெக்னிக்கல் கட்டுரை எழுத நினைத்தேன்.எனக்கு வந்த சின்ன பிரச்சனை. அதாவது
கம்பியூட்டர் ஆன் பண்ணியாச்சு. எல்லாம் ஓப்பன் ஆகி லோட் ஆகி விட்டது.ஆனால்
கீபோர்ட் வேலை செய்யவில்லை.மவுஸ் மட்டும் அதுவும் தப்பு தப்பாக வேலை செய்யுது..உதாரணத்திற்கு
ஏதோ ஒரு பக்கத்தில் வீலை ரோல் செய்தால் பக்கம் சின்னதாகவும் பெரியதாகவும்
மாறுகிறது. மேலும் கீழும் நகரவில்லை.நியூ டேப் ஒப்பன் செய்தால் ரெண்டு ரெண்டாக
ஓப்பன் ஆகுது.
ஆகா நம்ம பதிவு பிடிக்காத யாரோ சூனியம் வச்சி
இருப்பாங்களோ..(பிரச்சனை சரியாகட்டும் சொந்த காச போட்டு சூனியம் வச்சி நம்மள பிளாக்கல இன்னைக்கு எழுதவிடாம செஞ்சவங்க பிளாக்க
யாரும் படிக்காத மாதிரி செஞ்சி வைக்கணும்.....அப்படினு ஒரு நெனப்பு கூட வந்திச்சு....
கோபத்துல)....இல்ல வைரஸ் கிய்ரஸ் வந்துபுட்டானா.... பயம் வந்து விட்டது.
புதுசாய்
இணைத்த புரோகிராம்ஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டேன்.அவாஸ்ட் அக்காவ கூட்டு செக் பண்ண
சொன்னேன். பயப்படாதே தம்பி வைரஸ் கிய்ரஸ் எதுவும் இல்லை
என்றார்கள்.அப்பாடா கொஞ்சம் நிம்மதி வந்தது. இவ்வளவும் கீபோர்ட் இல்லாமல் தட்டு தடுமாறி ......ரீஸ்டார்ட் ...எல்லாம் நிறைவேற்றியும் வெற்றி கிட்ட வில்லை....இப்ப
என்ன செய்வது.
தீர்மானம்
இயற்றிக்கொண்டேன்
1. வெளியூர்
ஆட்டக்காரர்களான அமெரிக்கா..... ஆப்ரிக்கா.... இங்கிலாந்து... நண்பர்களை போனில்
அழைத்து கேட்பது.
2. உள்ளூர் ஆட்டக்காரர்களான
மெக்கானிக் நண்பர்களை அழைத்து தீத்து கட்டுவது.
3. சொந்த
காலில் நின்னு ஜெயிப்பது.(தெரிஞ்சாதானே !)
என் பிரச்சனைக்கு யாராவது சரியான தீர்ப்பு சாரி தீர்வு சொல்லுங்கள்.
Technicals & Technologies
வளர்ந்துவிட்ட உலகில்
கடவுளின் பிரதிநிதியாக டெக்னிக்கல் மற்றும் டெக்னாலஜியை டெக்னிக்காக பயன்படுத்தி
மனித உயிர்களை காப்பாற்ற போராடும் டாக்டர்களை அனுப்பியதற்கு அவருக்கு மீண்டும் ஒரு
தேங்க்ஸ் சொல்லுங்கள் டாக்டர்களுக்கும். உதிரிபாக கண்டுபிடிப்பாளர்களுக்கும்
பெற்றோர்களுக்கும் உன்னத வீட்டு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.
இப்படித்தான் முடிக்க
முடியும் :
சாலச்சிறந்தது :- 1. வரும் முன்
காத்துக்கொள்ளுங்கள்.
சற்றே சிறந்தது :- 2.
வந்த பின் காத்துக்கொள்ளுங்கள்.
என் கம்பியூட்டர் பிரச்சனைக்கு சரியான தீர்வு யோசித்து கண்டுபிடித்து விட்டீர்களா ?
நாட்டாமை என் தீர்ப்பு இது தான்.
கீபோர்டை உற்றுப்பார்த்தால் 'ஷிப்ட் கீ' நன்கு அழுந்தி
இருந்தது. அடக்கடவுளே ! இதனால் தான் இத்தனை அமக்களமா...... கீயை பிடித்து
மேலே இழுத்து விட்டேன் எல்லாம் பழையபடி ஓகே. இம்மாம் நேரம் இதபாக்காம.....எனக்கே
சிரிப்பு தாங்கல. ( இது மாதிரி உங்களுக்கு
பிரச்சனை ஏதாவது வந்தால் எல்லா கீயையும் ஒவ்வொன்றாக மேலே இழுத்து பார்க்கவும்.எப்பூடி
நம்ம டெக்க்க்க்க்க்னிக்.
யாருக்காவது கம்பியூட்டர் ல பிரச்சனைனா எனக்கு ஒரு போன
போடுங்க. நான் உடனடியா தீர்த்து கட்டி விடுகிறேன்.(எதை ?)
அஜித் ஆட்டோ ஓட அடுத்த ஆட்டோவின் கண்ணாடியை சரி பண்ணுவாரே அது
மாதிரி ஏதாவது புது டெக்னிக் பயன்படுத்தி சரிபண்ணிடலாம் பாஸ்.......கவலைப்படாதீங்க..எனக்கும் டெக்னிக்,டெக்னாலஜி எல்லாம் தெரியும்............
நம்புங்க பாஸ்......
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
எண்ணமும் எழுத்தும்-2
தொடர்புடைய இடுகைகள்: ,
,
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்
வலைச்சர தள இணைப்பு : சண்டே என்றால் ரெண்டு!ஹீ
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணார் அவர்களே!
பதிலளிநீக்கு