ஞாயிறு, டிசம்பர் 08, 2013

அன்பு ................. எங்கே

காலங்காலமாய் கற்றது என்ன ? – மனமே

கலியுகம் போவது எங்கே ?.


வேதங்கள் சொல்வது என்ன ? – மனமே

வேதமதங்கள் செல்வது எங்கே ?.
இதயங்கள் சொல்வது என்ன ? - மனமே

இன்னுயிர் இருப்பது எங்கே ?.சகோதரர்கள் புரிவது என்ன ? - மனமே

சட்டங்கள் இருப்பது எங்கே ?.சாதிகளில் இருப்பது என்ன ? - மனமே

சதிகள் பரவுவது எங்கே ?.சம்பிரதாயங்கள் செய்வது என்ன ? – மனமே

சாஸ்திரங்கள் சொன்னது எங்கே ?.இணையத்தில் இருப்பது என்ன ? - மனமே

இன்றைய தலைமுறை செல்வது எங்கே ?.அனுபவங்கள் சொல்வது என்ன ? - மனமே

அற்ப மனிதன் போவது எங்கே ?.திருக்குறள் சொல்வது என்ன ? – மனமே

திருந்தா மனிதன் போவது எங்கே ?.கண்ணகி சிலம்பில் இருந்தது என்ன ? – மனமே

காதல் கணவன் சென்றது எங்கே ?.நெஞ்சிலே இருப்பது என்ன ? - மனமே

நீடூழி வாழ்வது எங்கே ?.காவியங்கள் சொன்னது என்ன ? - மனமே

காப்பியத்தில் படித்தவை எங்கே ?.எல்லார்க்கும் எல்லாம் தெரிந்தும் என்ன ? - மனமே

அன்பு அது இருப்பது எங்கே ?.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!