சனி, டிசம்பர் 07, 2013

T.Rவீரப்பாண்டியன் கட்ட பொம்மன் என நினைத்து தவறுதலாக 

வெள்ளைக்கார வீரர்கள்  TR யை கைது செய்து  துரையிடம் 

அழைத்துச்செல்கிறார்கள்............ அங்கே....
நீ தான் வீரப்பாண்டிய கட்டபொம்மனோ ?

“வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கும்

வீராசாமி பட நாயகனுக்கும்

வித்தியாசம் தெரியாத

வீரர்கள் கொண்ட

வீணாப்போன ஜான்சன் துரை

வீங்கிப்போவ ஓங்கி கொடுப்பேன் உன் கன்னத்தில் அரை.

ன் வரி கட்டவில்லை ?


டேய் வெள்ளை

ஏன்டா அடிக்கிற எங்க நாட்டை கொள்ளைநீ கேட்பது வரி

நாங்க கஷ்டப்பட்டு நெய்யறோம் தரி

அதனால வரி கட்ட சொல்லமாட்டேன் சரி

உன் மூஞ்சியில பூசப்போறேன் கரிநீ கட்ட சொல்ற கப்பம்

தின்னுட்டு விடர ஏப்பம்

போட சொல்ற ஒப்பம்நீ போட்டுனு இருக்க கோட்டு

உனக்கு வைக்கப்போறேன் வேட்டுநாங்க அறுப்பது நெல்லு

எங்ககூட வயலுக்கு வந்தாயா சொல்லு


நாங்க எடுப்பது களை

எடுக்கப்போறேன் உன் தலைஎங்க பெண்கள் போடுவது மஞ்சள்

எங்கிட்ட நடக்காது உன் மிஞ்சல்எங்கிட்ட கேட்காத கிஸ்தி

எனக்கு தெரியும் குஸ்திதுடிக்குது தோளு

இடுப்புல இருக்குது வாளு- ஒட்ட

வெட்டப்போறேன் உன் வாலுஎங்க நாட்ட விட்டு ஓடு

இல்ல அனுப்பிடுவேன் சுடுகாடுஎங்களுக்கும் இருக்குது மூளை

எங்கிட்ட காட்டாத உன் வேலைத்தூ மானங்கெட்டவனேயாரை கேட்கிறாய் வரி

எனக்கு பிடிக்குது வெறி

உன்னை வெட்டி எரிப்பேண்டா கரி

வனை கூட்டிகொண்டுப்போய் தூக்கில் போடுங்கள் “


நீ போட நினைக்கிற தூக்கு


நாங்க நடத்தப்போறோம் தாக்கு


தூக்கு மேடை எனக்கு பஞ்சி மெத்தை – உனக்கு


கல்லறை மேடை கட்ட எழுதிவை உன் சொத்தை


வந்தே மாதரம் ! .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!